ஊருக்கு சொல்ல

ஸ்டாக் புகைப்படக்கலை (Stock Photography) — உங்கள் பொழுதுபோக்கை காசாக்கும் முறை

Stock Photography (Tamil Guide)அறிமுகம்

இவ் டிஜிட்டல் யுகத்தில் (Digital Era) இணையத்தளம், விளம்பரம், சமூக ஊடகப் பதிவு, வலைப்பதிவு ஆகிய அனைத்திற்கும் காட்சிகள்/புகைப்படங்கள் அவசியமான ஒன்றாக உள்ளது. அதற்காக இவ்வாறான துறைகளில் பணிபுரியும் ஒவ்வொருவரும், நிறுவனமும் அவர்களுக்கான புகைப்படக்கார்களை வைத்திருக்க முடியாது அல்லவா.  

இதற்கான தீர்வு தான் ஸ்டாக் புகைப்படக்கலை (Stock Photography).

ஸ்டாக் புகைப்படம் (stock photography) என்பது, தரமான புகைப்படங்களை (photography)  இலஸ்திரேசன்களை (Illustration), வீடியோக்களை (Video) ஆன்லைனில் விற்பனை செய்யும் முறையாகும். உலகம் முழுவதும் வடிவமைப்பாளர்கள் (Designers), ஆசிரியர்கள் (Editors), வலைப்பதிவாளர்கள் (Bloggers), விளம்பர நிறுவனங்கள் (Advertistment Agencies) இவ் ஸ்டாக் புகைப்படங்களை அவர்களது தேவைக்கமைய கொள்வனவு செய்து பயன்படுத்துகிறார்கள்.

ஸ்டாக் புகைப்படத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

1920களில் அமெரிக்காவில் பத்திரிகைகள் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு தேவையான படங்களை முன்கூட்டியே களஞ்சியப்படுத்தி வைத்து சில கம்பனிகள் விற்பனை செய்துவந்தது. 

1950களில் இது தனித்துறையாய் உருவானது. Getty Images, Corbis, Shutterstock போன்ற நிறுவனங்கள் 1990களில் இதை ஆன்லைன் வர்த்தகமாக (online) மாற்றியதால், ஸ்டாக் போட்டோக்ரபி (Stock Photography) வணிகம் ஓர் உலகளாவிய வணிகமாக வளர்ந்தது.

இன்றோ, கோடிக்கணக்கான புகைப்படங்கள் Shutterstock, Adobe Stock, Dreamstime, Alamy, Freepik, iStock, Pexels, Pixabay போன்ற தளங்களில் கிடைக்கின்றன.

இதில் எப்படி காசு உழைப்பது?

புகைப்படங்கள் (Photos), இலஸ்திரேசன்கள் (Illustrations), வீடியோக்களை (Videos) களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் ஒரு ஸ்டாக் தளத்தில் (Stock Site) அவற்றை பதிவேற்றி (Upload), அத்தளத்தின் சந்தாக்காரர்கள் (Subscribers) அல்லது கொள்வனவாளர்கள் (Customers)  யாரேனும் அவற்றைப் பதிவிறக்கும் (Download) போது அவர்களுக்கு  அதன் பயன்பாட்டிற்கு உரிமம் (license) வழங்குதல் மூலம் அதற்காக அறவிடப்பட்ட கட்டணத்தின் சிறு பங்கை பதிவேற்றம் செய்த கலைஞருக்கு (Contributor) கமிஷனாக (Commission) வழங்கப்படும்.

உரிம வகைகள் (Licensing Types)

இந்த உரிமம் (Licensing) வழங்கும் முறை  இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது :

  • Royalty-Free (RF) – ஒருமுறை உரிமத்தை கொள்வனவு செய்துவிட்டால், அப்படத்தை எத்தனை முறை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • Rights Managed (RM) – ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்கும் தனித்தனி உரிமம் தேவை.

உதாரணமாக: ஒரு விளம்பர நிறுவனத்திற்க்கு  தங்கள் விளம்பரத்திற்காக “சிரிக்கும் குழந்தை” ஒன்றின் புகைப்படம் தேவைப்படுகிறது, அத்தகைய படம் ஏற்கனவே ஒரு ஸ்டாக் தளத்தில் (Stock Website)  இருந்தால், குறித்த விளம்பர நிறுவனம் அவ் ஸ்டாக் தளத்தில் RF முறையில் அல்லது RM முறையில் உரிமம் வாங்கி விளம்பரத்தில் அப்படத்தை பயன்படுத்தலாம். (RF முறையில் உரிமம் பெறுதல் RM முறையைவிட கட்டணத்தில் அதிகமாகும் )

ஸ்டாக் புகைப்படங்கள் பயன்படும் துறைகள்

  • விளம்பரங்கள்
  • இணையதள வடிவமைப்புகள்
  • கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகள்
  • வலைப்பதிவுகள் மற்றும் செய்தி தளங்கள்
  • சமூக ஊடகக் கருத்துப்படங்கள் (Social Media Posts)
  • பிரேசன்டேஷன்கள் (Presentation) மற்றும் வணிக ஆவணங்கள்

கலைஞர்களுக்கு இதன் முக்கியத்துவம்

ஸ்டாக் புகைப்படக்கலை என்பது தொழில்முறையிலோ, பொழுதுபோக்காகவோ ஓர் வருவாய் ஈட்டும் வழி. இதற்காக நீங்கள் பதிவேற்றும் ஒவ்வொரு புகைப்படமும் முதலீடே!

ஒரு புகைப்படக்கலைஞர் ஒருமுறை படம் எடுத்து பதிவேற்றினால், அது பதிவேற்றப்பட்ட தளங்களில் பலமுறை விற்கப்படலாம், விற்கப்படும் ஒவ்வொரு முறைக்கும் உங்களுக்கான கமிஷன் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆகவே இதுவொரு பாசிவ் இன்கம் (Passive Income) வகை முதலீடாக கருதலாம்.

இம்முதலீட்டின் நன்மைகள்:

  • உலகளாவிய வாடிக்கையாளர்களிடம் உங்கள் படைப்பு கொண்டு செல்லப்படும்.
  • ஒரு படம் பல முறை விற்பனை செய்யப் பெருகின்றமை.
  • உங்களுடைய புகைப்படங்களில் ஓர் தனித்துவமான சிக்னேசர் டச் (Signature Touch) இருப்பின் உங்கள் பெயரை உலகளவில் பிரசித்தி பெற செய்ய சிறந்த ஊடகமாக ஸ்டாக் போட்டோகிரப்பி (Stock Photography) முறை திகழ்கிறது..
  • நாட்டுக்கு டாலர்களை உழைத்து தரக்கூடியதாக இருத்தல்.

ஸ்டாக் போட்டோக்ரபிக்குள் (Stock Photography) நுழைவதற்க்கு முன் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்கள்

ஸ்டாக் புகைப்படங்கள் (Stock Photographs) தொழில் முறை தரத்தில் (Professional Quality) இருக்க வேண்டும். அதன் அடிப்படையில்

  • உங்கள் புகைப்படங்கள் குறைந்தது 4 மெகாபிக்சல் (4MP) அளவில் இருத்தல் அவசியம்.
  • புகைப்படங்களின் noise அளவு மிகக்குறைவாக இருத்தல் அவசியம், ஆகவே சிறந்த ஒளி சமநிலையில் (Light Balancing) படம் பிடித்தல் அவசியம்.
  • Sharpness, focus மற்றும் color balance சரியாக இருக்க வேண்டும்.

இதற்கான கருவிகள்:

  • DSLR கேமரா, அல்லது சிறந்த கையடக்க தொலைபேசி கேமராக்கள்.
  • Studio Light அல்லது Natural Light.
  • Editing Software (Adobe Lightroom, Photoshop). அளவுக்கு அதிகமாக எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

உரிமம் மற்றும் சட்ட நெறிகள்

புகைப்படங்களை ஸ்டாக் தளங்களில் பதிவேற்றுவதற்கு முன் அத்தளத்திற்குறிய சட்டத்திட்டங்களுக்க உட்பட்டதாக அவை அமைய வேண்டும்:

  1. Model Release:

நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்களில் தெளிவான மனித முகங்கள் இருப்பின் அந்நபர்களின் அனுமதியை பெறுவது அவசியம், அதற்காக ஸ்டாக் தளங்களில் Model Release form ஒன்று வழங்கப்படும் அதை பதிவிறக்கி  அதில் கேட்கப்பட்டிருக்குக் விபரங்களை நிரப்பி குறிப்பிட்ட புகைப்படத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

  1. Property Release:

தனியார் இடங்கள், கட்டிடங்கள் உங்கள் புகைப்படங்களில் உள்ளடங்கி இருப்பின் அவ் உரிமையாளரின் அனுமதியை Model Release சுக்கு செய்தது போல் Property Release Form ஒன்றை நிரப்பி புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. Copyright Safety:

பிராண்ட் லோகோ (Brand Logo), கலைப் பொருட்கள், அல்லது வேறொருவர் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது என்பன குற்றமாக கருதப்படும்.

இவற்றை பின்பற்றாவிட்டால், புகைப்படங்கள் நிராகரிக்கப்படலாம் அல்லது சட்டப் பிரச்சனை எழலாம். அத்தோடு உங்கள் ஸ்டாக் வலைத்தளக்கணக்கு (Stock Site Account) நிரந்தரமாக முடக்கவும் (Account Suspension) படலாம்.

வருமானம் பெறும் முறை

ஸ்டாக் தளங்கள் புகைப்பட கலைஞர்களுக்கு அவர்கள் பதிவேற்றிய படங்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதன் அடிப்படையில் பணம் (கமிஷன்) வழங்குகின்றன.

பின்வரும் தளங்கள் பதிவிறக்கத்திற்கான வருவாய் குறிப்புகள்

Shutterstock      $0.10 – $2.00

Adobe Stock      விற்பனை விலையின் 33% வரை

iStock/Getty      விற்பனை விலையின் 20% – 45% வரை

Dreamstime       விற்பனை விலையின் 25% -60% வரை

Alamy         விற்பனை விலையின் 40%-50% வரை

வெற்றிக்கான உத்திகள்

ஸ்டாக் புகைப்படத்தில் வெற்றி பெறுவதற்கு சந்தைத் தேவையைப் புரிந்துகொள்வது மிக முக்கியம்.

நீங்கள் அன்றாட கடந்து போகும் அத்தனையும் ஸ்டாக் போட்டோக்ரபி இல் சேரும். ஆனால் போட்டி மிக அதிகமாக இருக்கும் தலைப்புகளுக்கு உரிய படங்களை தவிர்ப்பது நல்லது. அவ்வாறான பொது தலைப்புகளுக்குறிய புது புகைப்படங்கள் விற்பனையாவதற்கான சந்தர்ப்பங்கள் மிக மிக குறைவு.

உதாரணமாக Shutterstock தளத்தில் “Rose Flower” என்று தேடினால் கிட்டத்தட்ட 4,179,459 படங்கள் இருக்கிறது. இதில் நீங்கள் ஒரு ரோஜாப்பூவின் படத்தை பதிவேற்றம் செய்து விற்பனை செய்வது சாத்தியமா!!

ஆகவே எப்போதும் குறைந்த போட்டி உள்ள தலைப்புகளுக்கான தரமான படங்களை பதிவேற்றம் செய்வதில் கவனம் செலுத்துங்கள்.

ஸ்டாக் புகைப்படத்தின் எதிர்காலம்

AI உருவாக்கும் படங்களின் ஆதீக்கம் (AI-Generated Images) வளர்ந்தாலும், மனிதர்கள் எடுக்கும் உண்மை உணர்வுகள், இயற்கை காட்சிகள், மனித உறவுகள் ஆகியவைக்கு  எப்போதும் டிமாண்ட் இருந்து கொண்டுதான் இருக்கும்.

எதிர்காலத்தில்: 360° Photos, Drone Footage, Cinematic Stock Videos, Virtual Reality (VR) Content போன்றவை பெரிய பங்கை வகிக்கும்.

சவால்கள் மற்றும் வாய்ப்புகள்

சவால்கள்:

  • போட்டி அதிகம்
  • குறைந்த கமிஷன் விகிதம்
  • சட்ட சிக்கல்கள்

Shutterstock தளத்திலும் Adobe stock தளத்திலும் ஒரு கலைஞர் பெற்றுக்கொண்ட பேமண்டுகள் பின்வருமாறு.  

கீழுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் Sutterstock, உலகின் மிகப்பெரிய ஸ்டாக் புகைப்பட தளத்தில் இணைந்துகொண்டு உங்கள் புகைப்படங்களையும் விற்பனை செய்யலாம். Click Here

This Post Has 14 Comments

  1. super spin

    Heard about super spin and wanted to investigate for myself. Pretty good, worth a look. Check it out super spin!

  2. af88win

    I recently checked out af88win and I liked what I saw! Worth investigating, I’d say. Have a look at af88win and you be the judge.

  3. 72betcomlogin

    Just logged into 72betcomlogin. The login was smooth and easy which is what I can appreciate. Give them a shout! 72betcomlogin

  4. 78wib

    Checking out 78wib. So far so good, lots of action to get into. Give it a whirl, what are you waiting for? 78wib

  5. phdreamph

    Phdreamph, is this my dream site? Let’s find out! I’m looking for some serious wins, so don’t let me down. Time to try my luck! phdreamph

  6. pppviplogin

    PPPviplogin, logging in like a boss! Hoping for that VIP treatment and some sweet, sweet rewards. Let’s see what this VIP experience is all about. pppviplogin

  7. spbu777login

    Spbu777login, let’s go! Quick and easy login, just what I like. Now show me the money! Hoping for some big wins on this site. spbu777login

  8. brwingdas

    I really enjoy the community vibe and the competitive games. It is my go to spot for relaxing after work. Check out brwingdas.

  9. bjbajiapplogin

    Logging in is a breeze and I never face any glitches. It is the most stable app I have used so far. Just head over to bjbajiapplogin.

  10. br3333br

    The gameplay here is just top notch. I had a few questions and the support team handled them quickly. Big thumbs up for br3333br for the great service!

  11. 999wingame

    If you’re looking for a place with great bonuses for new players, this is it. I had a blast winning my first few rounds. Visit 999wingame for the best action.

  12. semesta88slot

    The game variety here is insane! I love how smooth the interface is even on my old phone. If you love slots, you must try semesta88slot.

  13. 55bmwcomcasino

    High quality gaming experience right here. I appreciate how everything is organized and how easy it is to find my favorite games on 55bmwcomcasino.

  14. br456betsim

    I love how fair the odds are on this platform. It gives me a lot more confidence in my bets. I’ll be sticking with br456betsim for a long time.

Leave a Reply