Yuvan Shankar Raja – ஒரு தலைமுறையின் வாழ்க்கையோடு பயணிக்கும் இசை

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். ஆனால் “இந்த இசை நம் வாழ்க்கையை பற்றி பேசுகிறது, நம்மோடு பயணிக்கிறது” என்ற இசை உணர்வை ஒரு தலைமுறைக்கு கொடுத்தவன் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) தான். அது ஒரு சாதாரண விஷயம் அல்ல. அது திட்டமிட்டு உருவாக்கிக்கொண்ட image உம் அல்ல. அது யுவன் (Yuvan) தற்செயலாக இண்டஸ்ட்ரிக்குள் வந்ததை போன்று ஒரு இணைப்பாகும்.
Yuvan Shankar Raja இசையின் உடனடி Emotional Connection
யுவனின் (Yuvan) இசை நம்மில் ஊடுருவக்கூடியது. பொதுவாக சில இசையமைப்பாளர்களின் இசையை கேட்க கேட்கத்தான் பிடிக்கும் ஆனால் யுவனின் (Yuvan) இசை கேட்டவுடன் பிடிக்கும் ரகம். அவ் இசை நம் மனநிலையை புரிந்துகொண்டு, அதே வேகத்தில் நம்மோடு பயணிக்கிறது. அதனால்தான், யுவன் (Yuvan) பாடல்கள் பெரும்பாலும் “எனக்கு பிடிச்ச பாடல்” என்ற இடத்தை தாண்டி, “என் பாடல்” என்ற இடத்துக்கு சென்று விடுகின்றன. அது தான் Yuvan music emotional connection மேஜிக்.
Broken People-களுடன் Connect ஆகும் Yuvan Music
இளைஞர்களுடன் யுவன் (Yuvan) connect ஆகும் முதல் காரணம், அவன் இசை perfect ஆன மனிதர்களைப் பற்றி பேசவில்லை.
அவன் இசை குழப்பமான மனிதர்களைப் பற்றி பேசுகிறது. காதலில் தெளிவு இல்லாதவர்கள், வாழ்க்கையில் direction தெரியாதவர்கள், தங்களைப் பற்றிய நம்பிக்கை இல்லாதவர்கள் போன்ற broken people லுக்கு யுவன் இசையில் ஒரு இடம் இருக்கிறது.
Yuvan காதல் பாடல்களின் உண்மை
ஒரு யுவன் (Yuvan) காதல் பாடலை எடுத்துக்கொண்டால், அதில் பெரும்பாலும் வெற்றி பெற்ற காதல் இருக்காது. அங்கே எதிர்பார்ப்பு இருக்கும், பயம் இருக்கும், சொல்ல முடியாத உணர்வுகள் இருக்கும்.
சில நேரங்களில் அந்த காதல் தொடங்குமுன்னே முடிந்திருக்கும். அதனால்தான், யுவன் (Yuvan) பாடல்கள் காதல் எவ்வளவு அழகோ, அவ்வளவு வலியையும் உண்டு என்று காட்டுகிறது.
“நான் Strong இல்லை” – Honest Emotions in Yuvan Music
பல இளைஞர்கள் யுவன் (Yuvan) பாடல்களுடன் connect ஆக முக்கிய காரணம், அந்த பாடல்களில் “நான் strong” என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. அவை பல நேரங்களில் “நான் உடைந்திருக்கிறேன்” என்று நேர்மையாக ஒப்புக்கொள்கின்றன.
அந்த நேர்மையே, கேட்பவர்களுக்கு ஒரு ஆறுதலாக மாறுகிறது. “நான் மட்டும் இப்படி இல்லை” என்ற ஒரு நிம்மதியை கொடுக்கிறது.
அவ் இசை தனிமையை அழகாக மாற்றுகிறது. தனிமையில் இருப்பது ஒரு குறை அல்ல, அது ஒரு நிலை என்று அவனது பாடல்கள் சொல்கின்றன. ஒரு இரவு ஹெட்ஃபோன் போட்டுக்கொண்டு, யுவன் (Yuvan) பாடல் கேட்கும்போது, அந்த தனிமை சுமையாக தெரியாது. அது ஒரு உரையாடலாக மாறிவிடும் இசையோடு.
Youth Pressure-ஐ புரிந்துகொள்ளும் Yuvan Music
யுவன் (Yuvan Shankar Raja), யுவதிகளை விடவும் இளைஞர்களின் இதயத்தில் தான் சிம்மாசனம் இட்டு அமர்த்திருக்கிறான் காரணம் இளைஞர்கள் வாழ்க்கையில் அதிகம் சந்திப்பது அழுத்தத்தையே. படிப்பு, வேலை, குடும்ப எதிர்பார்ப்புகள், சமூக ஒப்பீடுகள் என எல்லாம் மனதுக்குள் ஒரு சத்தமாக ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அந்த சத்தத்தை யுவன் (Yuvan) இசை முழுமையாக அடக்கிவிடாது என்றாலும் அதன் குமுறலை புரிந்துகொள்கிறது. “நீ இப்படித்தான் feel பண்ணுவ” என்று தீர்ப்பு சொல்லாமல், “நீ இப்படித்தான் feel பண்ணுற” என்று ஏற்றுக்கொண்டு வழித்துணையாய் வரும் ஓர் உருவமில்லா உணர்வாக அவ் இசை நம்மோடு பயணிக்கிறது.
காலத்தைக் கடந்து பேசும் Yuvan Songs
யுவன் (Yuvan) connect ஆகும் இன்னொரு முக்கிய காரணம், அவன் இசை ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிக்கிக்கொள்ளவில்லை. ஒரு இளைஞன் கல்லூரி காலகட்டத்தில் யுவன் (Yuvan) பாடல் கேட்கிறான். அதே நபர் வேலைக்கு போகும்போது அதே பாடலை வேறொரு அர்த்தத்தில் கேட்கிறான்.
சில வருடங்கள் கழித்து, வாழ்க்கையின் இன்னுமொரு கட்டத்தில், அதே பாடல் இன்னொரு விதமாக பேசுகிறது. ஒரே பாடல், ஆனால் கேட்பவன் மாறிக்கொண்டே இருக்கிறான் அவனுக்கு ஏற்ப அவ் இசையும் மாறிக்கொண்டிருக்கிறது.
Fast World-ல் Pause Button போல Yuvan Music
இன்றைய இளைஞர்கள் மிக வேகமாக ஓடிகொண்டிருக்கும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாமே instant. அந்த தீரா ஓட்டத்துக்குள் கூட, யுவன் இசை ஒரு நிமிடம் நிறுத்தி, “நீ எப்படி இருக்க?” என்று கேட்பது போல இருக்கும். அதுவும் Yuvan music emotional connection தான்.
Yuvan Songs as Memory Chips
அவன் ஒவ்வாரு பாடலும் ஒரு மெமோரி சிப் போல் (Memory Chip) பல நினைவுகளை சேமித்து வைத்துருக்கும் அது துக்கமோ, சோகமோ பல இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட தருணத்தோடு இணைந்திருக்கிறது.
ஒரு first love, ஒரு painful breakup, ஒரு exam failure, ஒரு long bus journey, ஒரு late-night overthinking moment. அந்த தருணம் நினைவுக்கு வரும் போதெல்லாம், அந்த இசையும் சேர்ந்து வரும். இதுதான் உண்மையான emotional connection.
Yuvan Shankar Raja – A Living Legacy
அதனால்தான், ஒரு தலைமுறை யுவன் இசையோடு வளர்ந்தது, வாழ்கிறது காலம் மாறினாலும், மனநிலைகள் மாறவில்லை. அந்த மனநிலைகளுக்கு யுவன் இசை இன்னும் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
ஒரு இசையமைப்பாளரை “legend” என்று சொல்ல, அவன் எத்தனை விருதுகள் வாங்கினான் என்பதைக் கணக்கிட தேவையில்லை.
அவன் இசை எத்தனை தனிமையான இரவுகளில், எத்தனை உடைந்த மனங்களை, எத்தனை மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதிலும் அவ் legacy தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த அளவுகோலில் பார்த்தால், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) ஒரு இசையமைப்பாளர் மட்டும் அல்ல.
Yuvan Music Never Ages
அவன் ஒரு தோழன். ஒரு நினைவு. மனசுக்குள் ஒலிக்கும் குரல்.
அதனால்தான், யுவன் இசைக்கு வயசாகாது. ஏனெனில் அது வருடங்களை பற்றியது அல்ல. அது உணர்வுகளைப் பற்றியது.
நம்மூர் hiphop இசை சம்பவக்காரன் Krishan Maheson இன் சம்பவங்கள் பற்றி வாசிக்க (இங்கு Click செய்யவும்)
Author – Viky

M88est… feels like a good vibe here. Let’s see if Lady Luck is on my side tonight. Gonna roll the dice! Place your bets on m88est!
Pingback: Krishan Maheson, இலங்கை தமிழ் Tamil Rap முன்னோடி
Sabong67? Alright, if you’re into that sort of thing… Heard it’s got good streams, but I’m not judgin’. Just be careful out there, yeah? See for yourself: sabong67
Qibetvn caught my eye the other day. The site looks pretty clean, and the mobile experience is decent. Still testing the waters, but so far, so good. Definitely worth a peep: qibetvn
Hey guys! Just checked out Betboomplataforma. Seems like a solid option, a lot of games to choose from. Anyone else tried it out? Let’s share experiences! Check it out here: betboomplataforma
I’m researching options and came across ev88dubeyclinic. The website looks professional, I’m digging the layout. Definitely worth a look for more information, here’s their site: ev88dubeyclinic.
Downloaded the g55betapp the other day. Pretty simple to use. If you are in the market for such an app, then give this a try, then you might find your home there! You can check them out on g55betapp.
Hey everyone, just saw g55betcom. I think the website loads quick. I am not sure what else I can tell, I think the best if that you check it yourserlf. Visit them at g55betcom.
Q9betapp, not bad, not bad at all! App is easy to use, and I found the games I wanted. Maybe a few more promos? But happy overall. Cheers! q9betapp
sc88bet is cool. It is easy to deposit and withdraw so I’ll play here again. Solid overall. sc88bet
Heard Super Ace 2 is the bomb! Gonna check it out, fingers crossed for some wins! Check it out here super ace 2.
Gave bg88 a whirl and had a decent time. The user interface is clean and the games are pretty standard. Give it a go yourself: bg88.
Pretty solid experience with f9games. Decent graphics and good gameplay kept me entertained. Check out what all the hype is about: f9games.
Tried ffwin3 and it’s not bad at all. Pretty easy to get the hang of. Nothing too crazy but decent for some casual fun. Give it a shot with ffwin3.