ஊருக்கு சொல்ல

கிரிஷான் மகேசன் எனும் நம்ம ஊரு சம்பவக்காரன் (Rapper Krishan Maheson)

Krishan Maheson Tamil Rap

Krishan Maheson  இலங்கை Tamil Rap இசையின் முன்னோடி!
அவரின் ஹிச்டோரி (History) ஜாகிரபி (Geography) ஆகியவற்றை அலசுவதற்கான கட்டுரை அல்ல இது! தலைவன் செய்த சில சம்பவங்களின் அலசல் ஆகும்! 

90களின் இறுதியில் கிரிஷான் – English Rapல் உச்சம்

Krishan Maheson Tamil Rap தலைவன 90களின் இறுதிகளில் இங்கிலீஸ் ராபில் (English Rap)) ஸ்ப்ரேரிங் (sparring) பண்ண ஆளே இல்லனு சொல்லலாம் அந்த அளவுக்கு டிமாண்ட் அப்போ ரிலீஸ் ஆகுற பாட்டுகளில் பீக்குல இருந்த விஜய்சேதுபதி போல தலைவனுடைய ராப் போஷன் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். 

Iraj மற்றும் “Run Run Run” – தமிழ் ராப்பின் புதிய அத்தியாயம்

அப்படி இருக்கும் போது தான் 2001 ஆம் ஆண்டு இராஜ் (Iraj) என்ற கலைஞன் மார்க்கெட்டையே திருப்பிபோட்ட சம்பவக்காரன் ஆகுறத்துக்கு முதல் சம்பவமாக “இராஜ்“ (Iraj) என்ற ஆல்பத்தை வெளியிட அதிலும் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்த ”ரன் ரன் ரன்“, பாடலில் தமிழ் ராப்பை (Tamil Rap) சங்கீத், ஸ்டாட்டிக் K9 ஆகியோரோடு இணைந்து பாட அது வேறு லெவல் சம்பவம் ஆனது. அதுவும் அப்பாடலின் காட்சி அமைப்பு தமிழ் கலாச்சாரத்தை ஒட்டி அமைக்கப்படிருக்கும். அது வரை இந்திய சினிமா பாடல்களை ரசித்த நம் தமிழ் மக்களுக்கு இது  புதிதாக இருந்தது.

“Ninda Noyena” – இலங்கை டிஜிட்டல் இசையின் திருப்புமுனை

அடுத்ததாக  ”நிந்த நொயென“ பாடலை ரணிந்து (Ranindu) பாட இங்கிலீசில் தலைவன் ராப் செய்திருப்பார்,  அன்று முதல் இன்று வரையுமே ரணிந்து என்ற கலைஞனுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாலாமே இருக்கு. இலங்கையில் டிஜிட்டல் இசைக்கு பிள்ளையார் சுழி இட்டவரே மனுஷன் தான்  இந்த ”நிந்த நொயென“ பாடல் வந்த காலகட்டத்தில் அவரும் பீக்நிலை கலைஞர் அப்படி இருக்க இந்த பாடல் சகோதர மொழி தெரிந்த இல்லசுகளின் தேசிய கீதமாக இருந்தது, வானொலிகளில் ரெக்கார்ட் தேயும் வரை போடப்பட்ட பாடல் ஆனது.

J Town Story – முதல் தமிழ் ராப் அடையாளம்

இப்படி கிரிஷானின் சம்பவங்கள் தொடர 2005 இல் ”J Town Story“ என்ற இலங்கையின் முதல் தமிழ் ராப் பாடல் இராஜீன் (Iraj) இசை கைவரிசையில் தலைவன் தன் முதல் ஆல்பத்திற்கான பாடலாக யவ்வணன், இன்பாஸ் ஆகியோரின் இணைப்பில் வெளியிட, இப்பாடல் அக்காலத்தில் இந்திய சினிமா பாடல்களுக்கு நிகராக தமிழ் மக்கள் மற்றும் அல்லாது சிங்கள மக்களாலும் கொண்டாடப்பட்டது. அது மட்டுமின்றி அக்காலத்தை தமிழ் ஹிப்ஹாபின் எழுச்சி காலம் எனலாம், ஓரு பக்கம் 2004 இல் வெளிவந்த ரகுமானின்  எக்ஸ்பெரிமெண்டல் “பேட்டை ராப்” பாடல் இசையின் ஒரு புது பரிமாணமாக பார்க்கப்பட, யோகி பீயின் (Yogi B) வல்லவன் ஆல்பம் 2006 இல் வெளியாகி 2009 காலகட்டத்தில் உலகத்தர சம்பவம் ஆகிறது.

Asian Avenue – Universal Music India வெளியிட்ட முதல் இலங்கை ஆல்பம்

இப்படி விரல்விட்டு எனக்கூடிய தமிழ் ராப் சம்பவங்களுக்குள் நம் தலைவன் தன் முதல் ஆல்பமான “ஏசியன் அவன்யு”

Krishan Maheson Tamil Rapவை “யூனிவேர்சல் மியூசிக் இந்தியா” (Universal Music India) இலங்கையின் முதல் ஆல்பமாக 2006 இல் வெளியிடும் போது உயர் கல்விக்காக 2005 இல் இசை துறையில் உச்சத்தில் இருக்கும் வேளை தலைவன் இங்கிலாந்துக்கு செல்ல அவர் இசை பயணத்தில் அக்காலகட்டம் ஒரு இடைவெளி வீழ்கிறது.   

“Raja Raja Chola” & “Ninaivugale” – UKயில் கொண்டாடப்பட்ட பாடல்கள்

ஆனாலும் ஏசியன் அவன்யு ஆல்பத்தில் வெளியான J town story மட்டும் அல்லாது “ராஜ ராஜ சோழா” தமிழ் ஹிப்ஹாப்பின் (Tamil HipHop) ஒரு சரித்திர சுவடு எனலாம் அப்பாடலை யோஹன் (Yohan) இசை அமைக்க நில்லுக்ஷி (Nilukshi) மெலோடி போஷனை பாட இங்கிலிஷ் ராப்பில் தலைவன் மற்றும் பீ கே (B.K) ஆகியோர் ஸ்ப்ரேரிங் செய்திருப்பார்கள். இலங்கையில் இது J Town Story அளவிற்கு ஹிட் இல்லை என்றாலும் UK போன்ற இடங்களில் கொண்டாடி தீர்க்கப்பட்டது. அடுத்தது “நினைவுகளே” என்ற காதல் காவியம் ஸ்ரீ ராமின் (Sriram) வரிகளிள் தலைவன் மற்றும் சர்ஜுனால் (Sarjun) பாடபட்ட இப்பாடல் லண்டன் நகரில் படமாக்கப்பட்டிருக்கும். இன்று வரை இலங்கையில் வெளிவந்த தமிழ் ஆல்பம் பாடல்களில் தெவிட்டாத மெட்டாக வளம்வரும் சம்பவம் அது. 

Bone Thugs N Harmony இன் “I Tried” பாடலில் இன்ஸ்பயர் (Inspire) ஆனதை போல் சவுண்டுங்ஸ் (Sounding) கொண்ட நஷ்டல்ஜிக் (Nostalgic)  பீல் (Feel) ஒன்றை தரும் தலைவனின் தரமான, சிறப்பான சம்பவமாக “நினைவுகளே ” ட்ராக்கை (Track) சொல்லலாம். 

இப்படி தமிழ் மியூசிக் இந்தஸ்ட்ரியில் சம்பவக்காரன் ஆன தலைவனின் ப்ரைம் டைமில் (Prime Time) எடுத்த இடைவேளை தன் மியூசிக் கேரியரில் பெரும் ட்ரா பேக் (Drawback) ஆன போதும் திரும்பி இறங்கி செய்தான் தலைவன்.

Avatharam – Auto Tune & RNB Touch

பட்டப்படிப்பை முடித்து இலங்கை வந்து  2010 இல் “அவதாரம்” Krishan Maheson Tamil Rapஎன்ற தனது இரண்டாவது ஆல்பதை இறக்கினான் அதில் “அமுதமே” என்ற பாடலை பீ கேயுடன் (B.K) இணைந்து பாட, அந்த கால கட்டம் தான் பிட்ச் கரெக்ஷன் செய்ய ஆட்டோ டியூனிங் உபயோகிக்க ஆரம்பித்த காலம் அமுதமே” பாடலிலும் ஆட்டோ டியூனிங் (Auto Tune) ஒரு யுநீக் (Unique) டச் கொடுத்தத்து. அத்தோடு அப்பாடல் ஹிப்ஹாப்பா (HipHop), மெலோடியா (Melody) என்று குறிப்பிட்ட ஒரு ஜோனருக்குள் அடங்காமல் ஒரு வித ஆர் என் பீ (RNB) டச்சோடு வானொலிகளில் ரீபிட்டாக ஒலிபரப்பப்பட்டது.

Remix Culture & “HO HO Endhan Darling”

அடுத்தது “ஓ ஓ எந்தன் பேபி“ என்ற 1961 இல் வெளிவந்த தேன்னிலவு திரைப்படத்திற்காக ஏ. எம். ராஜாவின் இசையில் கண்ணதாசன் எழுதி ஏ. எம். ராஜா, ஜிக்கி பாடிய பாடலை “ஓ ஓ எந்தன் டார்லிங்” என்ற ரீமிக்ஸ் வேர்சினாக பீ கேயுடன்(B.K) இணைந்த இன்னொரு ஹிட்டாக கொடுத்திருந்தார், இது  பக்கா ஹிப்ஹாப் பாடலாக, பழைய பாடலையும் ரசிக்கும் படி சாம்பலிங் (Sampling) முறையில் மிக்ஸ் செய்து அட்டகாசமான ஒரு வீடியோ பாடல் வடிவமாக தலைவன் கொடுத்திருப்பான் அதில் “தமிழ் ராப்பில் இன்னும் நான் தான்டா கிங்கு” என்றளவு சம்பவம் செய்திருப்பார். 

ஸ்லொவ் என்றாலும் ஸ்டெடியாக தலைவனின் சரித்திரம் உருவாகிக்கொண்டிருக்க.

Pidivadha Kari & Missed Popularity

மீண்டும் 2012 இல் “பிடிவாதக்காரி” என்றொரு பாடலை தலைவனே இசையாமைக்க மீண்டும் ஹிட் காம்போ பீ கே (B.K) மற்றும் கிரிஷான் (Krishan Maheson) இணைப்பில் ஒரு மேஜிக் நிகழ்கிறது, இதற்கான வரிகளை நோயேல் ஆரோக்கியம் (Noel Arokiyam) எழுதி இருப்பார். இப்பாடலை தலைவன் பாட பீ கே (B.K) ராப் செய்திருப்பார். மிகவும் அருமையான வரிகள் மற்றும் மெலோடி சம்பவம் என்றாலும் அப்பாடல் மக்கள் மத்தியில் பெரிதாக  பிரபலம் அடையவில்லை என்பது கவலைக்குறிய விடயமே! அது மட்டுமன்றி அப்பாடலை கேட்டு அடிக்ட் ஆனவர்கள் அப்பாடலை மீண்டும் தேடி கேட்க முடியாமலும் இருந்தது. ஆனால் அப்பாடலுக்கான ஒரு காணொளி 2020 இல் வெளியிடப்பட்டது.

2016 – Sri Lankan Tamil Rap Cypher

இதன் பிறகு தலைவன் பெரிதாக சம்பவம் எதுவும் செய்ய வில்லை என்றிருக்கும் போதும் 2016 இல் உலகத்தர சம்பவம் ஒன்றை செய்கிறான், இலங்கைக்குள் அங்காங்கே முளைத்துக்கொண்டிருந்த 9 தமிழ் ராப் இசை கலைஞர்களை ஒன்றிணைத்து உலகின் முதல் ராப் சைபரை (Rap Cypher) தன்னோடு சேர்த்து 10 ராப் போஷன்கள் உள்ளடக்கலாக “இலங்கை தமிழன்” என்ற பெயரில் தமிழ் ஹிப்ஹாப்பின் ஒரு தரமான சம்பவமாக வெளியிட உலகத்தமிழ் ஹிப்ஹாப் ரசிகர்கள் பலரின் கவனத்தை அது ஈர்த்தது. Krishan Maheson Tamil Rap

Krishan Maheson Tamil Rap Legacy தொடர வேண்டும்

இப்படிப்பட்ட நம்ம ஊர் சம்பவக்காரன் இப்போது நம் நாட்டை விட்டு ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்து விட்டான் என்பது கவலைக்குரிய விடயம் என்றாலும்,

                    “தல நீ எங்கிருந்தாலும் லெகசிய விட்டுறாதனு டீக்கடே சார்பா கேட்டு கொள்கிறோம்.

உலக தமிழ் ஹிப்ஹோப் இசையின் தரமான சம்பவங்கள் செய்த யுவன் ஷங்கர் ராஜா பற்றிய கட்டுரையை படிக்க (இங்கு Click செய்யவும்)
 Author – Viky
 
 
 
 

This Post Has 10 Comments

  1. trangchubong88

    Trangchubong88 is the place to be! Been following them for sports betting and they haven’t let me down yet. Give it a shot, you might like it! trangchubong88

  2. phfun22

    PHFun22? Oh, yeah! Been playing here for a while now. Decent bonuses and the games keep me entertained. Give it a shot when you’re bored! phfun22

  3. 35phfunlogin

    35phfunlogin is pretty straightforward. Easy to log in, easy to play. Nothing fancy, but gets the job done! If you like it simple, this is for you. 35phfunlogin

  4. majicjili

    Majicjili? More like MAGIC! The games are visually stunning, and the payouts are pretty sweet, too! I’m hooked! Level up your game! majicjili

  5. 22phdreamlogin

    22PHDreamLogin, okay, I’ve logged in. Signup was easy enough. Grinding now for those jackpots. Fingers crossed! Try your luck: 22phdreamlogin

  6. mnl63.con

    MNL63.con, just found it. Registration bonus looks tempting. Hope the games are as hot as the bonus. Check it out if you feelin’ lucky: mnl63.con

  7. 999phl

    Alright, checking out 999phl. Looks like a decent platform for a quick game. Hope the odds are good! Give it a shot, you might just get lucky. Check it out here: 999phl

Leave a Reply