நெடுந்தீவு (Delft Island) பயண வழிகாட்டி

யாழ்ப்பாணத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு நெடுந்தீவு (Delft Island) ஆகும்.
அத்தீவிற்கான கடல் வழி பயணத்தை ஆரம்பிப்பதற்காக முதலில் நீங்கள் குறிக்காட்டுவான் கப்பல் துறைமுகத்தை வந்தடைய வேண்டும்.
யாழ்ப்பாண பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள HNB வங்கி மெற்றோ கிளைக்கு நேர் எதிரில் குறிகாட்டுவானுக்கான தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.
இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ்கள் (CTB) பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் (பஸ் இலக்கம் 776).
அப்பஸ் பயணம் கிட்டதட்ட ஒரு மணித்தியாலமாகும். (33 கிலோமீட்டர்கள்).
80, 90 காலகட்ட சினிமா பாடல்கள், பஸ் நிரம்ப அடைக்கப்பட்ட மக்களுடன் பண்ணை பாலம், வாணர் பாலம் ஆகியவற்றை கடந்து பயணிக்கும் ஒரு சுவாரஸ்யமான பயணமாக இது அமையும் (03/10/2025 இல் டிக்கெட் விலை 175/=)
குறிகாட்டுவானுக்கு தனிப்பட்ட வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கான அறிவுரை
நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாகனங்களில் பயணிக்கிறீர்கள் என்றால் குறிகாட்டுவானில் வாகன தரிப்பிடமொன்று உள்ளது.
எனினும் நயினாத்தீவிற்கு செல்வோரும் தங்களது வாகனங்களை அங்கு விட்டு செல்வதால் பெரும் நெருக்கடியான சூழல் அங்க காணப்படுவதால் வாகனங்களை அங்கு விட்டு செல்வது பாதுகாப்பற்றது என்பதனை கருத்திற்கொள்க.
குறிகாட்டுவான் – நெடுந்தீவு (Delft) கப்பல் சேவை நேரங்கள்
குறிக்காட்டுவானிலிருந்து நெடுந்தீவு (Delft Island) செல்ல, கப்பல் சேவைகள் காலை 7.30, 8.30, பகல் 2.30, மாலை 4.00 மற்றும் கடைசி கப்பல் 4.45 ஆகிய நேரங்களில் செயல்படும். (சில நாட்களில் சேவை நேரங்கள் மாறுபடுவதுடன் ரத்து செய்யப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. காலநிலை காரணிகள் இவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றன.)
கப்பல் புறப்பட அரை மணித்தியாலத்துக்கு முன்னதாகவாவது குறிகாட்டுவான் துறைமுகத்தை சென்றடையும் வகையில் பயணத்தை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
காரணம் குறிப்பிட்ட அளவு மக்களை ஏற்றி செல்லவே அக்கப்பல்களுக்கு கடல்படையினரால் அனுமதி வழங்கப்படும். ஆகவே ஏதேனும் காரணத்தினால் தவறவிட்டால் அடுத்த கப்பல் நேரம் வரை காத்திருக்க நேரிடலாம்.
அத்தோடு அவ்வூர் மக்களுக்கு அக்கப்பலில் பயணிப்பதற்கான முதலிடம் வழங்கப்படும். இப்பயணம் கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்களை கொண்டது அதற்காக கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் எடுப்பதுடன் கட்டணமாக ஆளுக்கு 200 ரூபாய்கள் அளவிடப்படும்.
“கப்பல் பணத்தின் போது அவர்களால் வழங்கப்படும் உயிர்காப்பு அங்கியை கட்டாயமாக அணிந்து கொள்ளுங்கள்”
நெடுந்தீவு (Delft Island) துறைமுகத்தில் செய்ய வேண்டிய நடைமுறைகள்
நெடுந்தீவு துறைமுகத்தில் இறங்கியவுடன் பக்கத்தில் இருக்கும் கடற்படை அலுவலகத்தில் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய எந்த வகையான ஆவணத்தையாவது கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு குழுவாக செல்கிறீர்கள் என்றால் ஒரு நபர் பதிவை மேற்கொள்வது போதுமானது.
துறைமுகத்திலிருந்து தங்குமிடத்திற்கு செல்லும் வழிகள்
அந்த துறைமுகத்திலிருந்து நீங்கள் தங்குமிடத்திற்கு செல்ல எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை google map உதவியுடன் கணித்து சிறு தூரம் என்றால் நடந்து செல்லலாம்.
அல்லது அத்துறை முகத்தில் முச்சக்கர வண்டிகள் லேண்ட் மாஸ்டர்கள் (Land Master) போன்றவை இருக்கும் அவற்றை ஹயர் செய்து கொண்டு போகலாம். ஆனால் அவ்வாறாக ஹயர் செய்து போகும் முன்னர் அவ்விடத்திற்கான விலையை விசாரித்துக் கொள்ளுங்கள்.
காரணம் பொதுவாகவே அங்கு ஹயர் ரேட் (Hire Rate) அதிகம் தான். அதற்கான காரணம் சாதாரணமானது அவர்களுக்கான எரிபொருள்களின் விலை இலங்கையின் பொதுவான விலையை விட அதிகமாகும்.
அத்தோடு அங்கு செல்வதற்கு முன் தங்குமிட வசதிகளை கூகுள் அல்லது புக்கிங் டாட் காம் (www.Booking.com) மூலமாக முன்பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் அங்கு போய் தேடப் போனால் செலவு நிச்சயம் அதிகமாகும்.
நெடுந்தீவில் தங்குமிடம் – Delft Village Stay
“டெல்ப் வில்லேஜ் ஸ்டே (Delft Village Stay)” நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து 1.9 கிலோமீட்டர் தொலைவில் நடந்து போகும் தூரத்தில் இருக்கும் ஓர் தங்குமிட வசதியாகும். இது பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களின் இதயம் வென்ற ஓர் இடமாக திகழ்கிறது.
அங்கு தங்குமிட அறைகள் கேம்பிங் டெண்ட் (Camping Tent) முறையில் அமைக்கப்பட்டிருக்கும் அத்தோடு கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ள ஓர் இடமாகும் ( 10 நிமிடத்தில் நடந்து செல்லலாம்). அங்கேயே கிராமத்து வீட்டு சுவையுடன் கூடிய உங்களுக்கான உணவுகளை சாதாரணமான விலையில் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் வாடகைக்காக சைக்கிள்களையும் பெற்றுக் கொள்ளலாம்”
-இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் அல்ல ஒரு அனுபவ ரீதியிலான பரிந்துரை மட்டுமே-
நெடுந்தீவில் சிறந்த பயண திட்டமிடல்
உங்கள் பயண அட்டவணையை நீங்கள் திட்டமிடுகையில் நெடுந்தீவுக்கு ஒரு மாலை வேளை சென்றடையுமாறு திட்டமிடுவது சிறப்பாக அமையும். (நாம் பரிந்துரைப்பது 2.30 மணி கப்பல்) அதன் அடிப்படையில் மாலை அங்கு சென்றடைந்தால் தங்குமிடத்திற்கு சென்று ஒரு குட்டி தூக்கம் போட்டு தயாராகி மேற்கு கடற்கரைக்கு ஒரு நடை போட்டால் ரம்யமான சூரிய மறைவுடன் ஒரு கடல் குளியலையும் போட்டு, இருட்டும் வரை அத்தீவின் வீதிகளில் நடந்து திரிவது மனதுக்கு இதமாக இருக்கும்.
காணும் இடமெங்கும் பனை மரங்கள், மனிதன் நடமாட்டம் குறைந்த பாதைகள் அதிலும் நீங்கள் நகர்ப்புறத்தில் வாகன இரைச்சல், நெரிசல் சூழ்ந்த வாழ்க்கை முறையில் இருந்து செல்பவரானால், நெடுந்தீவு சொர்க்கமாக தெரியும். காரணம் அங்கு கார்கள், வேண்கள் எல்லாம் இருக்காது சில முச்சக்கர வண்டிகள், பைக்குகள் மற்றும் சில வாகனங்கள் மட்டுமே ஓடித்திரியும்.
அத்தோடு அங்கு வீடுகளுக்கான மதில் சுவர்கள் சீமெந்து கட்டுமானங்களுக்கு பதிலாக பவளப்பாறைகளை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி மதிலாக உருவாக்கப்பட்டிருக்கும். அதில் பாசிகளும் பிரண்டை கொடிகளும் படர்ந்து கோட்டை சுவர்களாக காட்சியளிக்கும். அங்குள்ள கடற்கரைகள் வெறுச்சோடி அமைதிக்கு பின்னணி இசை சேர்க்கும் அலை ஓசைகளுடன் கொள்ளை அழகாக இருக்கும். அத்தோடு அக்கடலின் ஆழம் சில மீட்டர் தூரம் வரை ஒரே மட்டத்தில் இருப்பது சிறப்பு.
நெடுந்தீவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்
East Coast Beach – சூரிய உதயம்

அதிகாலை சைக்கிளில் ஈஸ்ட் காஸ்ட் கடற்கரை (East Coast Beach) பக்கம் சென்றால் மிகவும் அழகான ஓர் சன்ரைசை கண்டு களிக்கலாம். ஈஸ்ட் காஸ்ட் கடலில், கரை பாங்கு குறைவாக இருக்கும் ஆனால் பவளப்பாறை கற்களினால் ஆன அக்கடலில் நீரில் சில தூரம் நடந்து போகலாம்.
அத்துடன் நடுநடுவே இருக்கும் கற்களில் அமர்ந்தபடி சூரிய உதயத்தை ரசிக்கலாம். மற்றும் அவ்விடத்தில் நீர் தெளிவாக இருக்கும் அதனூடாக சிறுசிறு கடல்வாழ் உயிரினங்கள், சங்கு சிற்பிகள் போன்றவற்றை பார்ப்பதுடன் கரையில் சங்கு சிற்பி ஓடுகள் விதவிதமாக ஏராளமான அளவு குவிந்திருப்பதை பார்க்கலாம்.
நெடுந்தீவு தேசிய பூங்கா – காட்டு குதிரைகள்

சூரிய உதயத்தை தொடர்ந்து நெடுந்தீவு தேசிய பூங்கா பக்கம் போனால் கூட்டம் கூட்டமாக காட்டு குதிரைகளை பார்க்கக் கூடியதாக இருக்கும்.
நெடுந்தீவு (Delft Island) ஒல்லாந்தர் கோட்டை
அதை பார்த்து மீண்டும் வடக்கு கடற்கரை பக்கம் வந்தால் ஒல்லாந்தர் கோட்டையை பார்க்கக் கூடியதாக இருக்கும்.
500 வருடங்கள் பழமையான பெருக்கு மரம் (Baobab Tree)

அடுத்ததாக இலங்கையில் சில இடங்களில் மட்டுமே காணக்கூடிய 500 வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்த பெருக்கு மரம் (Baobab Tree) ஒன்றும் இருப்பதுடன் அதையும் பார்வையிடலாம்.
ஒல்லாந்தர் வைத்தியசாலை & புறாக்கூடு

பழைய ஒல்லாந்தர் வைத்தியசாலை, வைத்தியசாலை தோட்டத்தில் இருக்கும் கல்லால் ஆன புறாக்கூடு (ஒல்லாந்தர் கால தகவல் பரிமாற்ற புறாக்கள் வளர்க்கப்பட்ட கூடு) ஆகியவற்றை காணலாம்.
அனுமன் பாதச்சுவடு
அனுமன் பாதச்சுவடு என்று கருதக்கூடிய கல்லில் பதிக்கப்பட்ட பெரிய பாதச்சுவடு ஆகிய இடங்களை பார்க்கலாம்.
இவ்வாறான இடங்களை Island Tour என்று முச்சக்கர வண்டி உதவியுடன் பார்வையிடலாம் அதற்காக கிட்டத்தட்ட 10,000 முதல் 12,000 வரை அறவிடக்கூடும்.
முழுதாக அத்தீவை சுற்றிப் பார்க்க வேண்டும் எனில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேவைப்படும் ஆயினும் மேற்குறிப்பிட்ட இடங்களை பார்க்க ஓர் நாள் போதுமானதாக அமையும் ஆகவே உங்கள் பட்ஜெட் மற்றும் நேரத்திற்கு அமைய பயணத்தை திட்டமிட்டுகொள்ளுங்கள்.
நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் திரும்பும் கப்பல் நேரங்கள்
அங்கிருந்து குறிகாட்டுவானுக்கு திரும்புவதற்கான கப்பல் சேவைகள் காலை 6.15, 6.45, 11.30 பகல் 2.30 கடைசியாக 3.30 ஆகிய நேரங்களுக்கு உள்ளது.
இதில் நாம் உங்களுக்கு பரிந்துரைப்பது 11.30 மணிக்கு புறப்படும் கப்பலை ஆனால் நீங்கள் உங்கள் அட்டவனைக்கு ஏற்றதை போல் ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள். அத்தோடு மிக முக்கியமாக உங்கள் உடைமைகளை தவறவிடாமல் எடுத்துவர முன் ஆயத்தங்களை செய்து கொள்ளுங்கள்.
காரணம் தவற விடும் பொருட்களை மீண்டும் அங்கிருந்து வரவழைப்பதென்பது சற்றே கடினமான காரியமாகும்.
பயணிகளுக்கான முக்கிய வேண்டுகோள்!!
எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக அத்தீவில் உங்கள் பாதச்சுவடுகளை தவிற வேறெந்த விதமான பொருட்களையோ, குப்பையையோ விட்டுவிட்டு வர வேண்டாம் என டீக்கடை சார்ப்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Pingback: வங்கெடிகல மலை (Wangedigala)
Когда сталкиваешься с утратой близкого человека, важно найти надежную [url=https://ritual-stal.ru/]ритуальные услуги в Минске[/url], которая поможет организовать достойное прощание.
Необходимо проявить особое внимание и рассмотрения большого числа аспектов. В белорусской столице работает немало организаций, предлагающих ритуальные услуги, однако выбор проверенного исполнителя – может оказаться сложной задачей.
Следует учитывать, что стоимость ритуальных услуг подвержена колебаниям. Влияют на ценообразование выбранные ритуальные принадлежности, транспортные расходы и прочие факторы. Исходя из этого, целесообразно заранее уточнить все детали и получить подробную смету.
Выбор ритуального агентства: на что обратить внимание
Определяясь с ритуальной службой важно обратить внимание на ее положение на рынке. Просмотрите комментарии клиентов, посетите офис, чтобы сформировать личное мнение. Наличие лицензии и сертификатов также является важным показателем.
Убедитесь, что агентство оказывает все виды сервиса, включая оформление документов. Автомобили в собственности и специального зала для отпевания – дополнительные преимущества.
Оформление документов и организация церемонии
Оформление необходимых документов – обязательный этап организации похорон. предлагает помощь в. Это существенно снизит.
Организация церемонии прощания – важный этап, позволяющий достойно проводить усопшего. Выбор места проведения и зависят от пожеланий.
Дополнительные услуги и поддержка
Кроме стандартного набора ритуальные агентства часто предлагают дополнительные услуги, например, организацию поминок. Психологическая поддержка также в тяжелое время.
Важно помнить, что похоронный процесс – является делом личным. Отдавайте предпочтение агентстве, наиболее подходящий спектр услуг и окажет всестороннюю помощь.
**Спин-шаблон:**
“`
Организация погребения – это сложная и ответственная задача. и внимания ко многим деталям. В белорусской столице работает немало организаций, предлагающих ритуальные услуги, но выбор надежного партнера – может оказаться сложной задачей.
Важно помнить, что стоимость ритуальных услуг подвержена колебаниям. Определяют стоимость выбранные ритуальные принадлежности, транспортные расходы и прочие факторы. Поэтому рекомендуется заранее уточнить все детали и запросить детальный расчет.
При выборе агентства важно обратить внимание на ее положение на рынке. Ознакомьтесь с мнениями людей, посетите офис, чтобы получить представление о работе. Подтверждение квалификации и соответствия стандартам также является важным показателем.
Убедитесь, что агентство предлагает комплексное обслуживание, а также помощь в получении свидетельств. Собственный автопарк и помещения для проведения церемонии – важные факторы.
Оформление документов и организация церемонии – неотъемлемая часть организации похорон. Бюро ритуальных услуг. Это значительно облегчит.
Устройство похоронной процессии – ответственный шаг, дающий возможность почтить память умершего. Выбор места проведения и близких и родных.
В дополнение к базовым ритуальные агентства часто предлагают дополнительные услуги, такие как организация поминальных обедов. Психологическая поддержка также в трудный период.
Важно помнить, что организация похорон – это индивидуальный процесс. Выбирайте агентстве, которое предложит и окажет необходимую поддержку.
“`
Привет всем! Хочу поехать в Таиланд в 2025 году и нужно уточнить некоторые моментов. Скажем, как именно надежна погода в Хуахине и на Патонге в всякое время года? Кто бывал на пляжах Самуи, расскажите, где удобнее расположены пляжи на карте. Ещё интересует rent байка на Пхукете — сколько на данный момент стоит и какие цены грубо говоря в 2025 году? Нашёл на интересную инфу по этому вопросу по ссылке [url=https://bangkokescape.ru/]погос островами[/url] .
Еще нужно узнать про расхождение во времени между Москвой и Бангкоком, чтобы не прозевать на поездки и рейсы. А тем, кто тревожится насчет цунами, особенно 2004 года, можно поведать, как именно сейчас ситуация спокойная? Может, кто-то поделился отзывы про Андаманду Пхукет и тамошние рынки, допустим рынок на Патонге? И для информации тем, кто готовит бюджет — сколько денег фактически нужно брать с собой на 10 дней в Таиланде? Спасибо за советы!
Если вы намерены планируете путешествие по Чехии и хотите встретиться с самыми привлекательными городами Чехии, определенно посетите Прагу. Этот город обеспечивает массу attractions: Староместская площадь, Петршинская башня, замок Гоуска и популярная самая узкая улица в Праге — все это стоит включить в ваш план по Праге. Для тех, кто ищет информацию, что посмотреть в Праге за 1 день, на форуме можно обнаружить подробные указания и маршруты [url=https://pragagid2.ru/]чеське пиво[/url] .
Кроме того, Чехия признана своим чешским алкогольными напитками, особенно чешским пивом. Отменное чешское пиво можно продегустировать в таких точках, как Козловна Прага и в Седлецком монастыре, где показаны различные чешские разновидности пива и марки чешского пива, в том числе легендарное чешское пиво марки Влтавин. Если желаете узнать больше о чешском пиве и привычках, стоит присмотреться на известных чехов и историю Ян Гуса, которые оказывают влияние на культуру страны.
В случае если вы планируете путешествие между Берлином и Польшей, нужно знать промежуток и средства добраться. К примеру, познань берлин расстояние составляет около 270 км, а добраться можно поездом, что выгодно и скоро. Также многие выясняют, как достичь из берлина в потсдам или как переместиться до берлин-бранденбург аэропорт — есть разные альтернатив, с учетом поезд и автобус.
Для поклонников истории полезно посетить берлинский дворец или замки в environs берлина, а если необходимо больше подробностей о трассах и сообщении, предлагаю заглянуть в [url=https://holidaygid6.ru]аэропорт берлин бранденбург интернациональ[/url] . Коли вам важно прибыть из аэропорта берлина до автовокзала или разузнать сведения про поезда днепр-берлин или ужгород-берлин поезд, на платформе часто анализируют такие трассы и выдают практичные указания.
Когда готовите поездку в Потсдам и думаете, что осмотреть за один день, определённо призываем заглянуть на дворец Сан-Суси, Голландский квартал и японский сад. Помимо традиционных достопримечательностей Потсдама, стоит заглянуть в кинопарк Бабельсберг и замок Вальдек, чтобы иметь всестороннее представление об этом прекрасном городе. Для приверженцев природы здесь также много парков Германии, где можно хорошо провести время и порадоваться красотой ландшафта.
Коли вам любопытно, что изучить в Дюссельдорфе, не обойдите стороной блошиный рынок с его особенной атмосферой и широтой товаров (адрес и расписание запросто найти на [url=https://holidaygid5.ru]штольценфельс[/url] ), а также японский парк, который ранее назывался японским садом Дюссельдорфа. Почитателям подвижного отдыха и семейного совместного времяпрепровождения придётся по душе Фантазия Ленд — настаиваем заранее изучить информацию с ценами на билеты и аттракционами. Столь многогранные направления позволят сделать ваше путешествие по Германии интенсивным и ярким.