யூட்டியூபை நோண்டிக்கொண்டிருக்கும் போது “நியாயாதிபதி” என்று ஒரு திரைப்படம் கண்ணில்பட்டது முழுப்படமும் பதிவிட்டிருப்பதையடுத்து கமெண்ட் செக்சணை ஓபன் செய்தால் பாசிடிவ் கமெண்ட்டுகள் படர்ந்து இருந்தது அதிலும்
“மளையாள சினிமா மாஸ் படங்களை எடுப்பதில்லை அவர்கள் எடுப்பது அத்தனையும் மாஸ்டர் பீஸ்கள் தான்”

என்றெல்லாம் கொழுத்திப்போடப்பட்டிருந்தது. சரி பார்க்கலாம் என்று ஆரம்பித்தால் ஓபனிங் சீனே விரக்தி கலந்த பால்வடியும் முகத்துடன் ஓர் பையன் ஒரு மலையில் ஏறி உச்சியை அடைய விமானம் பறக்கும் சத்தத்துடன் மேலே பார்க்கிறான்.
300 நாட்களுக்கு முன் என்று ஃபிளாஷ்பேக் விமான நிலையத்தில் ஆரம்பிக்கிறது. அதே பால்வாடி முகம், டக்கின் செய்த கட்டம் போட்ட சட்டை என்று வர “அம்மணி” “அம்மணி” என்று ஒரு குடும்பமே அவனை வரவேற்கிறது. அந்த பெயரை கேட்டதும் சிறுபிள்ளை போல் கடுப்பாக்கிறான் ஹீரோ. பின் அப்படியே குடும்பமாய் ஒரு வண்டியில் புறப்படுகின்றனர். வண்டியின் டிரைவரும் ஹீரோவின் நண்பன் தான் பெயர் முகேஷ்.
அந்த குடும்ப கூட்டத்தில் ஒருவர் “வண்டியை நேராக மங்கலத்திற்கு விடு” என கூற, அடுத்த சீன் மங்கலம் என்ற புரோக்கரேஜில் கல்யாண பேச்சு நடக்கிறது. ஹீரோ “யாருக்கு கல்யாணம்” என கேட்க “உனக்கு தான்” என்கிறார்கள். “அப்போ நான் பொண்ணை பார்க்க தேவை இல்லையா” என கேட்க “அது தான் நாங்கள் பார்த்து விட்டோமே” என குடும்பத்தில் ஒருவர் கூற “பாதி ஆண்கள் முதலிரவில் தான் பெண்ணையே பார்க்கிறார்கள், அதைத்தான் இங்கிலீஷ்ல First Night Meet You” என்று தத்துவ ஜோக்கை போட்டு தாக்குகிறார் புரோக்கர்.
அடுத்த சீனில் என்ன நடக்கிறதென்று புரியாத மாப்பிள்ளை ஹீரோவிற்கும், சிரித்த முக chubby ஹீரோயினுக்கும் கல்யாணம் முடிந்து முதலிரவும் வந்து விடுகிறது. முதலிரவில் குண்டுப்பொண்ணு சர்புர்ரென்று குறட்டையுடன் குப்புற படுத்துக்கிடக்கிறாள், மாப்பிள்ளை ஹீரோவிற்கு வாழ்க்கை வெறுத்து போகிறது.
அடுத்த சீனில் அப்பா அம்மாவுடன் டிராவல் ஏஜென்சிக்கு போய் தேன்நீலவிற்கான பேக்கேஜ்களை விசாரிக்கின்றனர். அப்போது தான் மாப்பிள்ளை ஹீரோவின் முகத்தில் கொஞ்சமாவது பல்ப் எறிகிறது.
டிராவல் ஏஜெண்டும் சிம்லா, மணாலி, லச்சதீவ் என ரொமான்டிக் இடங்களாக லிஸ்ட் போட ஹீரோவின் அப்பா “பழனி!” பழனிக்கு போடுங்கள்” என்கிறார்.

என்ன இது ஹனிமூனுக்கு வந்த சோதணை என்றிருந்தாலும் பரவாயில்லை ஜோடியாக எங்கு போனால் என்ன என்று பார்த்தால் குடும்பம் குட்டிகள், நண்பன் முகேஷ், அவன் குடும்பம் என எல்லோருமே யாத்திரை கணக்காக பஸ் பிடித்து கிளம்ப தயார்.
அப்போது குண்டுப்பொண்ணு ஹீரோயின் ஏதோ துண்டு சீட்டை கொடுத்து பார்மசியில் அதை வாங்கி வர சொல்லி அனுப்ப பார்மசியில் அதை கொடுத்ததும் சேல்ஸ் பெண் சிரித்துக்கொண்டே ஏதோ மருந்தை எடுத்து கொடுக்க மாப்பிள்ளை ஹீரோ அது என்ன மருந்து என கேட்கிறான். அதற்கு “அது பீரியட்சை தள்ளிப்போடும் மருந்து” என ஒரு பையன் கூற கடுப்பாகி வந்த ஹீரோ தன் மானம் போச்சி, மரியாதை போச்சி என்று ஹீரோயினை ஏறு ஏறென்று ஏறுகிறான்.
அதற்கும் குண்டு பொண்ணு கலகலவென சிரிக்கிறது. அப்படியே கட் செய்து பழனி பக்கம் பார்த்தால் அங்கும் “கடுப்பேத்துறார் மை லாட்” என்றே மாப்பிள்ளை ஹீரோவின் நிலை தொடர்கிறது.
எல்லோரும் சாப்பிடுவதற்கு ஒரு ஹோட்டலுக்கு போக “யாருக்கு எது வேண்டுமோ ஆர்டர் செய்து சாப்பிடுங்கள்” என நாட்டாமை கணக்காக ஹீரோவின் அப்பா கூருக்கிறார். அதையடுத்து அவரவர் ஆர்டர்களுக்கு நடுவே மாப்பிள்ளை ஹீரோ காப்பி ஆர்டர் செய்ய “அதெல்லாம் வேண்டாம் அவனுக்கு பால் தான் பிடிக்கும்” என்கிறார் மாப்பிள்ளை ஹீரோவின் அம்மா. “இல்லை காப்பி தான்” என்று கறாராக கூறி அதை குடிக்க எடுத்த மாப்பிள்ளை ஹீரோ
“எனக்கு டைவர்ஸ் வேண்டும்”
என்று அசால்ட்டாக சொல்ல சில நொடிகள் நிசப்தத்தின் பின் இதுவும் காமெடி என்று அனைவரும் சிரிக்கிறார்கள். சற்றே தாமதித்தாலும் குண்டுப்பொண்ணும் சிரிக்கிறது. பின் சற்றேன்று எழுந்த மாப்பிள்ளை ஹீரோ “நான் என்ன காமெடியா சொன்னேன், சீரியஸாக எனக்கு டைவர்ஸ் வேண்டும்” என்று சொல்லி நகர அனைவரின் முகத்திலும் ஈ ஆடுகிறது!
அப்படியே ஒரு எட்டு மாதங்களில் மாப்பிள்ளை ஹீரோ தன் நண்பன் முகேஷ் உடன் டைவர்சுக்கு விண்ணப்பிக்க பல லாயர்களை பார்த்தும் யாரும் கேசை எடுப்பதாக இல்லை. அடுத்து வக்கீலாக வரும் அடுத்த ஹீரோ ஆசிப் அலியிடம் வந்து சேர வக்கீல் ஹீரோவும் “குண்டாக இருக்கிறாள், குறட்டை விடுகிறாள் என்றெல்லாம் டைவர்ஸ் வாங்க முடியாது” என விரட்டி அடிக்கிறார்.
ஆனால் மீண்டும் அங்கிங்கெல்லாமோ சுற்றி வக்கீல் ஹீரோவின் ஆசிஸ்டண்டாக நடித்துள்ள பசில் ஜோசபிடம் வர, அவரும் வக்கீல் ஹீரோவிடயம் சொல்லி பார்த்தாலும் பயன் இல்லை. ஆனால் மாப்பிள்ளை ஹீரோவின் நண்பன் முகேஷ் வக்கீல் ஹீரோவை விடுவதாக இல்லை.
வக்கீல் ஹீரோ வக்கீல் தொழில் மட்டுமன்றி ஓர் அரசியல் கட்சியின் தீவிர தொண்டனாகவும் இருக்கிறார். போஸ்டர் ஒட்டுவது, மீட்டீன்கள் நடத்துவது, கொடிபிடித்து கோஷம் போடுவது என்று அதில் ஆல் ரவுண்டராக இருக்கிறார். அப்படி ஒரு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அதற்குள் புகுந்த முகேஷ் அவர்களுடன் சேர்ந்து போலீஸிடம் அடிபட்டு ஜெயிலுக்கும் போக, சரி போனால் போகுதென்று மாப்பிள்ளை ஹீரோவின் கேசை எடுக்க ஒப்புக்கொள்கிறார்!
ஆனால் காசு அதிகம் வேண்டும் எனவும் கண்டிஷன் போட டைவர்ஸ் கேஸ் ரிஜிஸ்டர் ஆகிறது. அதை கேள்விப்பட்ட மாப்பிள்ளை ஹீரோவின் அப்பா, மாமா என அனைவரும் மாப்பிள்ளை ஹீரோவின் உடைமைகள், உடைகள் என அனைத்தையும் வெளியில் வீசி எரிந்து வீட்டை விட்டு துரத்த அதை அள்ளிக்கொண்டு புறப்படுமுன் “எல்லோரும் நல்ல கேளுங்க” என மாப்பிள்ளை ஹீரோ ஆரம்பிக்க, பையனுக்கு கோவம் வந்துறிச்சி என பார்த்தால் “எனக்கு பிடித்த பொண்ணை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்குத்தான் வருவேன்” என்று சொல்லிட்டு வாறான்! சரி இவன் எங்கத்தான் போகப்போகிறான் என்று பார்த்தால் நேராக வக்கீல் ஹீரோவின் ஆபீஸில் போய் டேரா போட்டிடுறான்.
பெண் வீட்டார் பக்கம் டைவர்ஸ் தரமுடியாது என்று வாதாட சீனியர் வக்கீல் ஒருவரை ஹயர் செய்கின்றனர் கோர்ட்டில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற பயிற்சி குண்டு பொண்ணுக்கும் அங்கேயும் அதேபோன்ற பயிற்சி மாப்பிள்ளை ஹீரோவிற்கு இந்தபக்கம் வக்கீல் ஹீரோவின் ஆசிஸ்டண்டும் கொடுக்க ஒருவாராக வழக்கு விசாரனைக்கு வர எதிர் தரப்பு சீனியர் வக்கீல் கேட்ட கேள்விகளுக்கு மாப்பிள்ளை ஹீரோ சொதப்பி தள்ள இது சோடிக்கப்பட்ட வழக்கு என்பதை புரிந்துகொண்ட நீதிபதி, வக்கீல் ஹீரோவை ஏசி இது போன்ற பொய் கேஸ்களுடன் இனி நீதிமன்ற பக்கம் வராதே என விரட்டி அடிப்பதுடன் இனி இந்த கேசை எடுக்கவே மாட்டேன் என்று டிஸ்மிஸ் செய்கிறார். அசிங்கப்பட்ட கடுப்பில் வெளியில் வந்த வக்கீல் ஹீரோ மாப்பிள்ளை ஹீரோவை பார்த்து “எதுக்கு நீ எல்லாம் இருக்க எங்காவது போய் சாவு” என்று கிளப்பி விட்டான்.
இப்போது நடப்புக்கு வருகிறது கதை! விரக்தியில் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு சாக கிளம்பி விட்டான் மாப்பிள்ளை ஹீரோ. மலை உச்சியில் இருந்து குதிப்பதற்கு முன் தன் மொபைலில் வீடியோ ரெக்காரட் செய்து
“என் மரணத்திற்கு காரணம் என் குடும்பத்தார் .. மற்றும்…. தன் வக்கீல்” என!
அடுத்த பக்கம் வக்கீல் ஹீரோ எதிர்பார்த்து காத்திருந்த எலக்ஷன் சீட்டு வேறொருவருக்கு வழங்கப்படப்போவதாக கட்சி அறிவித்ததுடன், வக்கீல் ஹீரோவை தெரிவு செய்யாததற்கான காரணம் அவர் பிரபலம் இல்லை, சொல்லும் படி எந்த கேசிலும் வெற்றி கூட பெற்றதில்லை என கூறு, மரத்தில் இருந்து விழுந்தவனுக்கு மாடு முட்டியதை போல் வக்கீல் ஹீரோவின் அசிஸ்டண்ட் கால் செய்து அவசரமாக வரச்சொல்லி அங்கு போனால், தொங்கிய முகத்துடன் மாப்பிள்ளை ஹீரோவும், முகேசும் நிற்க அசிஸ்டண்ட் வக்கீல் ஹீரோவிடம் மாப்பிளை ஹீரோவின் வீடியோவை காட்டி, சாகப்போனவனை முகேஷ் இழுத்து வந்ததையும் கூற ஏற்கனவே கடுப்பில் இருக்கும் வக்கீல் ஹீரோவுக்கு சுர்ரென்று ஏறுகிறது, மாப்பிள்ளை ஹீரோவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டு “நீ சாக வேண்டுமென்றால் சாவு என் பெயரை எதற்கு இழுக்கிறாய்” என கேட்க “ஏதோ ஆதங்கத்தில் சாகப்போனேன் ஆனால் சாகும் அளவிற்கு தைரியம் இல்லை சாரி, நான் ஒரு கோமாளி தான்” என பரிதாபமாக கதைக்க அப்செட் ஆனா வக்கீல் ஹீரோ, அவர் மிஸ் பண்ணிய சீட்டு, தோல்வி அடைந்த வழக்கு இரண்டையும் சரிகட்ட முடிவெடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டம் போடுகிறார். அதற்கு அவ்வழக்கை மீண்டும் விசாரிக்க மாட்டேன் என்ற நீதிபதியை கரெக்ட் பண்ண பொண்ணு பின்னால அழையும் விடலை பையனை போல் சுற்றி ஒருவாறு கேசை மீள் பரிசோதனைக்கு எடுக்கிறார்.
கடைசியில் மிஸ் பண்ண தன் கட்சி சீட்டை பெற்றாரா, வழக்கை வென்றாரா என்பது மிகுதிக்கதை
ஸ்கிரீன் பிளே நகர்வு ஸ்லோ என்றாலும், இசையில் கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் இல்லை என்றாலும் (பின்னணி இசை சில இடங்களில் அற்புதம்) நகைசுவை கலந்த ஒரு பீல் குட் மூவி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
“அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் , வெந்து தணிந்தது காடு” என்பதைப்போல் மலையாள சினிமா ஒருவரிக்கதைகளை ஓராயிரம் உணர்ச்சிகள் கலந்து பெரும் படைப்புகளாக்குகின்றன.
வாழ்க மலையாள சினிமா
குறித்த திரைப்படத்தை கண்டுகளிக்க கீழுள்ள லிங்கை சொடுக்குங்கள்

Just tried my luck at 567win1 and had a blast. Graphics are sharp and the payouts seem fair. Gotta love a site that feels straightforward. Check it out 567win1 for some fun!
Vnq8 is my favorite for football bets. They’ve got tons of options, the odds are top-notch, and cashing out is super easy. Been having a good run there. Give them a go if you’re into sports betting. vnq8
Win44app is a gem! I love the mobile app because I can play anytime and anywhere. Easy to use and fast payments. Highly recommend giving it a shot, you might just hit the jackpot. win44app
Xanh9vn has some pretty sweet promotions running. The interface is modern, and I’m really enjoying the overall experience. It’s worth trying out if you want something fresh. xanh9vn