Voice Deep Fake Scam – AI மூலம் நடைபெறும் உணர்ச்சி மோசடிகள்
சம்பவம்
“ப்லொரிடாவை சேர்ந்த ஷேரோன் என்ற பெண்ணுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் தன் மகள் கதறி அழுத்துக்கொண்டு கூறுகிறாள்,
“நான் என் காரில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை இடித்து விட்டேன், என்னை காப்பாருங்கள்..” என்று. அப்படி சொல்லி அழும் போதே அந்த இணைப்பில் இன்னும் ஒரு பெண் கதைக்கிறார். தன்னை ஒரு லாயராக அறிமுகப்படுத்திக்கொண்ட அப்பெண்
“நிலைமை சீரியஸாக இருக்கிறது விபத்துக்குள்ளான பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இப்போது உங்கள் மகளை போலீஸ் கைது செய்கிறார்கள். அவரை பெயிலில் எடுக்க 15000 டாலர்கள் உடனடியாக தேவைப்படுகிறது”. எனவும் வங்கியில் பணம் எடுக்கும் போது இதை பற்றி தெரிவிக்க வேண்டாம் அது உங்கள் மகளின் கிரெடிட் ஸ்கோரை குறைத்துவிடும் (அமெரிக்காவில் Credit Score அவர்களின் வங்கி கடன், வட்டி வீதம் முதலான பல விடயங்களுக்கு முக்கியமான ஒன்றாகும்) எனவும் கூறுகிறார்.
இதை கேட்டு பயத்தில் பதறிப்போன ஷேரோணும் அக்குறிப்பிட்ட பணத்தை வங்கியில் எடுத்து வீட்டில்வைக்க, லாயர் என்று நம்பிய பெண் காரில் வந்து அதை வாங்கி சென்றாள். பின்பு மகளின் மகன் (ஷேரோனின் பேரன்) வீட்டுக்கு வந்து குறித்த சம்பவத்தை கேட்டு சந்தேகப்பட்டு தன் அம்மாவுக்கு பல முறை கால் செய்து கடைசியாக அவர் பதில் அளித்து
“ஏன் இப்படி கால் பண்ணி கொண்டிருக்க ஏதும் அவசரமா? நான் வேலையில் பிஸியாக இருந்தேன்” என கூறுகிறார். அப்போது தான் இது ஒரு ஸ்கேம் என்பது தெரிய வருகிறது”.
கருத்து தெரிவித்த ஷேரோன்:
Voice Deep Fake Scam- இது குறுத்து ஷேரோன் கூறியதாவது “என் மகளின் அழுகை எனக்கு தெரியும், அந்த நேரத்தில் கூட, யாராலும் அது என் மகள் இல்லை என்று என்னை கன்வென்ஸ் செய்திருக்க முடியாது. இப்படி யாருக்கும் நடக்க கூடாது நானும் என் கணவரும் சமீபத்தில் தான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றோம். எம் இருவரின் மொத்த சேமிப்பும் போய்விட்டது”. என கண் கலங்கி போனார்.
Voice Deep Fake என்றால் என்ன?
மேற்குறிப்பிட்ட சம்பவம் 2025 ஜூலை மாதம் நடந்தது. இதே போல் பல ஸ்கேம்கள் சமீபத்தில் பதிவாகி வருகிறது. இது Voice Deep Fake AI தொழிநுட்பத்தை பயன்படுத்தும் செய்யப்படும் ஸ்கேம் ஆகும். இது இன்று தமிழ் சினிமாவில் AI ஐ பயன்படுத்தி இறந்த பாடகர்களின் குரலில் பாடல்கள் செய்யும் தொழிநுட்பத்தை ஒத்த AI சித்து வேலை ஆகும். நம் குரல் பதிவுகளை குறிப்பிட்ட சில AI மென்பொருள்களில் பதிவேற்றி அவற்றை Train செய்வதன் மூலம் அச்சு பிசறாமல் எங்களை போலவே பேச வைக்க முடியும்.
ஆபத்தை அறிவோம்!
இன்று AI புகாத இடமே இல்லை, என்றளவிற்கு எல்லா துறையிலும் AI இன் ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. இது மனிதனின் வேலை பழுவை குறைப்பதற்கானது, என்றும் இது மனிதனையே ரீப்லேஸ் செய்ய போகின்றது என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க நமக்கெதுக்கு இதெல்லாம் என்று நம்மில் பலர் இருந்தாலும் அவற்றால் ஏமாற்றப் படாமல் இருக்கவாவது AI பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்வது நல்லது.
Ai மூலம் வரக்கூடிய பல மோசடிகள் இருந்தாலும் மனிதர்களின் உணர்ச்சிகளை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு மோசடி தான் Deep Fake Scam ஆகும். உங்களுக்கு நெருங்கியவர்கள், தெரிந்தவர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல்கள் மூலம் அவர்களை ஆபாசமாக சித்தரித்து, மிரட்டி பணம் பறித்தல், மேற்குறிப்பிட்ட ப்லொரிடா சம்பவத்தை போல் குரல்களை clone செய்து ஸ்கேம் செய்தல், மற்றும் பெண்களிடம் ஆண்களைப்போலும், ஆண்களிடம் பெண்களைப்போலும் உண்மையான நபர்களை போன்ற AI போலிகளின் உதவியுடன் வீடியோ callகள் ஊடக ஆபாசமாக கதைத்து அவர்களது அந்தரங்கங்களை பதிவு செய்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்தல், ஆகிய மோசடிகள் அடங்கும். அப்படி நடந்த சில மோசடிகள் பின்வருமாறு:
AI Deep Fake Scam – உலகளாவிய சம்பவங்கள்
- அமெரிக்காவை சேர்ந்த 66 வயதுடைய ஒரு பெண்மணி தொலைக்காட்சி நடிகர் ஸ்டீவ் பார்டனின் போல உருவாக்கப்பட்ட போலி ஏ. ஐ. வீடியோ callகளை நம்பி, காதல் நம்பிக்கையில் தன் வீட்டை விற்று 80,000 டாலர்களுக்கு மேல் இழந்துள்ளார்.
- ஜோர்ஜியாவில் இருந்து இயக்கப்பட்ட கால் சென்டர் மூலம் போலி ஏ. ஐ. கிரிப்ட்டோ முதலீட்டு மோசடி ஒன்றின் ஊடாக UK, கனடா போன்ற நாட்டை சேர்ந்த கிட்டத்தட்ட 6000 நபர்களிடம் 35 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- ஹாங்காங் நாட்டின் ஒரு நிறுவனத்தின் CEO வின் Deep fake வீடியோ அழைப்பின் பேரில் அந் நிறுவனத்தின் நிதி பொறுப்பதிகாரி HK$200 மில்லியன் பணத்தை மோசடிக்காரர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
- ஆஸ்திரேலியாவை சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் AI மூலம் பெண்களின் புகைபடங்களை ஆபாசமாக மாற்றி, அவற்றை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளார்.
இது போன்ற scamகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
நம் நாட்டுக்குள் வருமா?
நம் நாட்டுக்குள் இது இன்னமும் பெரிதாக ஊடுருவவில்லை என்றாலும் நிச்சயம் வரும். அதற்கு சிறு உதாரணமாக சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்டன ஆகிய இருவரும் தத்தமது சமூக ஊடங்களில் பதிவிட்ட பதிவுகள் பின்வருமாறு.


சில நிறுவனங்கள் இவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி அவர்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை இவர்கள் ப்ரோமொட் செய்வதை போன்ற தத்துரூபமாக வீடியோக்களை உருவாக்கி அவற்றை விளம்பரமாக பாவித்துள்ளனர் (சோசியல் மீடியாக்களில் நீங்களும் அவற்றை பார்த்திருக்கலாம்). “இது தொடர்பாக நம் நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை படிக்க” (Click Here)
சமூகத்தில் பெரும் இடங்களில் இருக்கும் இவர்கள் போன்றவர்களையே Ai மூலம் மிஸ் யூஸ் செய்கிறார்கள் என்றால் சாதாரண மனிதர்களின் நிலை!
ஆகவே இவ் ஆபத்தை வராமல் தடுப்பது நம் சக்திக்கு அப்பாற்பட்டது ஆனால் நாம் எம்மை முடிந்த வரை அவ் ஸ்கேம்களில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? (கட்டுரை விரைவில்)
சிறு வயதில் விளையாட்டு தானமாக Open செய்த Gmail ஐ இன்னும் பாவிக்கிறீர்களா? அப்படி என்றால் அந்த Gmail இன் Data எதுவும் தொலையாத வண்ணம் அதன் பெயரை மட்டும் professional ஆக இப்போது நீங்கள் மாற்றிக்கொள்ளக் கூடிய வசதியை Google அறிமுகப்படுத்தி உள்ளது. அது தொடர்பாக மேலும் அறிய (இங்கு Click செய்யவும்)
Author – Viky
