ஊருக்கு சொல்ல

யார்டா இந்த பையன்!

“உடம்பு சரியில்லாத போதும் வேலைக்கு போய் விட்டு வீட்டுக்கு வந்து வேகுவேகென்று பக்கத்தில் உள்ள டாக்டரின் டிஸ்பென்சரிக்கு மருந்துக்கு  போனால், கூட்டம் நிரம்பி வழியும். “என்ன கொடுமையிது”  என்று முட்டி மோதி ஒரு நம்பரை எடுத்துக்கொண்டு நம் நம்பர் வரும் வரை தலையை தொங்கவிட்டு காத்திருந்தால் நடுநடுவே “இவருக்கு ரொம்ப முடியல்ல”, “அவருக்கு ரொம்ப ரொம்ப முடியல்ல” என்றெல்லாம் பிட்டுகளை போட்டு ஒருசில கடைசி நம்பர்கள் முந்திக்கொண்டு உள்நுழையும்! இதை எல்லாம் பொறுத்துக்கொண்டு காத்திருந்தால் அந்த பொழுது சாயும் வேளையில் இப்போது தான் குளித்துமுடித்து பிரஸ்ஸாக வேலைக்கு வருவது போல் பெர்ஃப்யூம் வாசனை தெறிக்க தெறிக்க கழுத்தில் டை, கையில் பையுடன் சில பசங்க கவுன்டரில் ஏதோ சொல்லிவிட்டு “யார்ரா இந்த பையேனு” அத்தனை பெரும் முறைத்து பார்த்தாலும் யார் முகத்தையும் பாராமல் எல்லோரையும் முந்திக்கொண்டு டாக்டரை சந்திக்க போய் நிற்பான், அங்கு டாக்டரின் அறை கதவருக்கே நீயா நானா என்பதைப்போல் நோயாளர்களுடன் பெரும் போட்டிக்கு மத்தியில் உள்நுழைந்தவர்களில் சில பசங்க சுவரில் அடித்த ரப்பர் பந்து போல் போனதும் திரும்பி வருவதும் உண்டு, இன்னும் சில பசங்க உள்ளேபோய் தூங்கிவிட்டார்களா என்பதைப்போல் வெளியிலுள்ள நோயாளர்களின் இரத்த அழுத்தத்தை எகிறச்செய்வதும் உண்டு.”

உண்மையில் யார் இந்த பசங்க?

அவர்களது வேலைத்தான் என்ன?

மெடிக்கல் ரெப் என்று அழைக்கூடிய மருத்துவ பிரதிநிதிகள் தான் அவர்கள். மருந்துகளை உற்பத்தி செய்யும் அல்லது விநியோகம் செய்யும் ஓர் நிறுவனத்தின், அம்மருந்துகளை சந்தைப்படுதும் பிரதிநிதி தான் அந்த பையன்.

அவர்களது ஜாப் ரோல் (Job Role) என்னவென்று கேட்டால் “ஜெனரேட்டிங் பிரிஸ்கிரிப்சன்ஸ்” (Generating Prescriptions) என சிம்பளாக கூறலாம். அதாவது தனக்கு கொடுக்கப்பட்டுள்ள மருந்துக்கான பிராண்டுகளை மருத்துவர்களிடம் சந்தைப்படுத்தி அம்மருத்துவர் மூலம் அப்பிராண்டை நோயாளர்களுக்கு பரிந்துரைத்தல் ஆகும்.

கேட்பதற்கு சிம்பளாக இருக்கிறதா?

நம்மிடையே ஒரு கருத்து இருக்கிறது ஃபார்மா கம்பெனிகள் டாக்டருடன் டீல் பேசி காசு கொடுத்தவுடன் டாக்டர் கண்டவர் நின்றவருக்கெல்லாம் கண்டகண்ட மருந்துகளை எழுதி தள்ளுவார் என்று. அது நம் பிழையல்ல நாம் இந்திய திரைபடங்கள் மூலமாக இப்படியான காட்சி அமைப்புகளை பார்த்திருப்பதுண்டு ஆனால் இலங்கை போன்ற ஒரு நாட்டில் அது அவ்வாறு கிடையாது அதற்கான காரணம் இலங்கையில் ஒரு டாக்டர் என்றால் அவர் உயர் தொழில்முறை (highly professional) கேட்டகரியை சேர்ந்தவராக இருப்பார் இங்கு காசு இருந்தால் வைத்தியர் ஆகலாம் என்ற நிலை இல்லை பாடசாலை படிப்பின் ஊடாக போட்டிப்பரீட்சைகளில் அதியுயர் சித்தி பெற்று பல்கலைகழகத்திலும் நான்கயிந்து வருடங்கள் கற்று அதில் மூன்று அமர்வுக்குள் பரீட்சையில் சித்தி பெற்று அதன் பின் ஒரு வருட பயிற்சி காலத்தில் (Internship) 24 மணித்தியாளமும் அற்பணிக்கப்பட்ட சேவையில் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் இருக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்று பட்டப்படிப்பை முடித்து வரும் வைத்தியர்களும் உண்டு அவர்கள் மீண்டும் இங்கு ஒரு பரீட்சை எழுத வேண்டும் அதுவும் 5 வருட கால அவகாசத்துக்குள் எழுதி சித்தியடைய வேண்டும், அத்தோடு வெளிநாட்டு பட்டதாரிக்களுக்கு (foreign Graduates) நியமனம் என்பது இங்குள்ள பட்டதாரி டாக்டர்கள் நியமனம் பெற்ற பிறகு மிச்சமீதி ஸ்டேஷன்கள் (வைத்தியசாலைகள்) தான் வழங்கப்படும். அத்தோடு இலங்கையில் வைத்தியர் ஒருவருக்கான ஊதியம், சமூக அந்தஸ்த்து, மரியாதை மற்றும் சலுகைகள் என்பன வேறெந்த துறைக்கும் இல்லாத அளவு அரசாங்கத்தாலும் சமூகத்தாலும் வழங்கப்படும்.  ஆகவே இங்குள்ள டாக்டர்கள் காசுக்கு விலைபோவது என்பது குறைவு. இவ்வாறான புரஃபஷனல்களை (Professional) கையாளுவதற்கு நடை, உடையில் நேர்த்தியும் தொடர்பாடல் மற்றும் அறிவு திறன்மிக்க நபர்களை மெடிக்கல் ரெப்களாக ஃபார்மா கம்பெனிகள் (Pharma Companies) நியமிக்கின்றன. இப்போது உங்களுக்கு தோன்றலாம் 

“இதற்கு பேசாமல் சாக்லேட், பிஸ்கெட் போன்று இவற்றையும் விளம்பரப்படுத்த வேண்டியது தானே ஐடியா இல்லாத பசங்க” என்று 

ஆனால் அங்கு தான் சட்டம் பாய்கிறது, மருந்துகளை மாஸ் மீடியா (Mass Media) என்று அழைக்கக்கூடிய தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்தத்தடை விதித்திருக்கிறது.

மருந்துகளில் ஓ. டி. சீ மருந்துகள் (O.T.C – Over The Counter Drugs), பிரிஸ்கிரிப்சன் மருந்துகள் (Prescription Drugs) என்று இருவகை உண்டு இதில் ஓவர் தி கவுண்டர் (Over The Counter) மருந்துகளை மருதுவரின் பரிந்துரை (Prescription) இன்றி நீங்களே கடைகளில் கொள்வனவு செய்து பாவிக்கலாம் அந்த கேட்டகரியில் தான் பெணடோல் சேரும். ஆனால் பிரிஸ்கிரிப்சன் (Prescription) மருந்துகள் கட்டாயமாக வைத்தியரின் பரிந்துரையுடன் பட்டோலையில் (Prescription)  எழுதப்பட்டு டாக்டரின் முத்திரையுடன் (Stamp) இருந்தால் மட்டுமே அதை நீங்கள் மருந்தகத்தில் (Pharmacy) காட்டி பெற்றுக்கொள்ளலாம். ஆகவே இவ்வாறான பிரிஸ்கிரிப்சன் மருந்துகளை (Prescription Drugs) புரொமோட் (promote) செய்யும் விளப்பரத்தாரர்கள் என்றும் மருத்துவ பிரதிநிதிகளை சொல்லலாம்.

உலகின் மிகப்பெரிய லாபம் ஈட்டக்கூடிய டாப் 10 வர்த்தகங்களை எடுத்தால் ஃபார்மசுடிகள் (Pharmaceuticals) வர்த்தகம் நிச்சயம் டாப் 5 க்குள் இருக்கும் அத்தோடு இது எப்போதும் துவண்டுப்போகாத ஓர் வர்த்தகம் என்பதால் தான் பில்கேட்ஸ் (Bill Gates) போன்ற உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் கூட இந்த வர்த்தகத்தில் கால்பதிக்க பார்க்கின்றனர் இதில் இன்னுமொரு முக்கியமான விடயம், பொதுவாக வியாபாரம் ஒன்றில் விளம்பரத்துக்கான செலவு என்பதே பெரும் பகுதியாக இருக்கும் ஆனால் ஃபார்மா கம்பெனிகளுக்கு (Pharma Companies) அந்த செலவு கிடையாது அதனால் தான் மெடிக்கல் ரெப்களுக்கான சம்பளம் மற்றைய இண்டஸ்ரிகளை (Industries) காட்டிலும் அதிகமாக இருக்கும் உதாரணமாக நேற்றுத்தான் ஸ்கூலிங் (Schooling) முடித்த பையன் போல் இருப்பவனும் காரில் வந்து இறங்குவான் கேட்டால் மெடிக்கல் ரெப் என்பான்!

சரி பொதுவாக மெடிக்கல் ரெப்பிற்கான சம்பள விபரங்களை பார்த்தால் இன்றைய நிலவரப்படி புதிதாக வேலைக்கு சேரும் ஒரு ரெப்பிற்கு 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கொடுக்கக்கூடிய கம்பெனிகள் உண்டு அது உங்கள் தொடர்ப்பாடல் திறமை, ஆங்கிலப்புலமை, கல்வித்தகைமை மற்றும் நேர்முகப்பரீட்சையில் நீங்கள் ஏற்படுத்தும் காண்பிடென்டின் அடிப்படையில் வேறுபடும் அடுத்ததாக வாகணத்திற்கான ரெண்டல் (Vehicle Rent) என்று மாதாந்தம் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை கொடுக்கப்படும். அவ்வண்டிக்காக மாதாந்தம் நீங்கள் செலவிடும் பெற்றோல் செலவும் வழங்கப்படும் ஆனால் நீங்கள் அன்றன்று வேலை செய்யும் ஏரியா (Working Area), அதற்கு எத்தனை கி.மீ கார் ஓடியது என்ற விபரங்களை வழங்க வேண்டும், உதாரணமாக ஒரு மாதத்தில் 1500 கி. மீ ஓடி இருப்பின் லீட்டருக்கு 14 கி.மீ என்கின்ற கணக்கில் 31,500 ரூபாய்கள் வழங்கப்படும். (இது கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும் ) அத்தோடு தனிப்பட்ட பாவனைக்கென்று (Personal Mileage) சில கம்பெனிகள் 100 – 150 கி. மீ களை இலவசமாகவும் வழங்கும். இவற்றை தாண்டி டே பட்டா (Day Bata- Daily Boarding Allowance and  Travel Allowance) என்று (500 ரூபாய்  – 800 ரூபாய் ) வரை வேலை செய்யும் ஒவ்வொரு நாளையும் கணக்கிட்டு வழங்கப்படும் அதுவே வெளி ஊர்களுக்கு (Outstation) போகையில் நைட் அவுட் (Night Out) என்று (3000 ரூபாய் – 4500 ரூபாய்) வரை வழங்கப்படும். 

இன்னும் முடியவில்லை, இவற்றை தாண்டி இன்செண்டிவ் (Incentives) என்று ஒன்று தரப்படும் இது ஓர் மெடிக்கல் ரெப்புக்கு வழங்கப்படும் டார்கெட்டை (Target) அச்சிவ் (Achievement) செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இது கம்பெனிக்கு கம்பெனி வேறுபடும் பொதுவாக 25000 ரூபாய் முதல் ஒன்றரை லச்சம் (அதுக்கும் மேல்) வரை கொடுக்கப்படுவதுண்டு. இவற்றை தாண்டி அடிக்கடி ஸ்டார் கிளாஸ் ஹோட்டல்களில் (Star Class Hotel) உணவு, வருடம் ஒருமுறை இலங்கைக்குள் சுற்றுப்பயணம் மற்றும் வருடத்திற்கான டார்கெட்  அச்சிவ் (YTD – Year to Date Achievement) செய்யும் பட்சத்தில் பாரின் டூர் (Foreign Tour) என்றெல்லாம் சலுகைகள் வழங்கப்படும் (எல்லா கம்பனிகளிலும் அல்ல).

சரி இவ்வளவு சலுகைகளும் இலகுவாக கிடைத்திடுமா! கண்டிப்பாக இல்லை, இது அத்தனைக்குமான ரிட்டன் ஆப் இன்வெஸ்ட்மண்டாக (R.O.I – Return of Investment) ஒரு கம்பெனி பார்ப்பது மெடிக்கல் ரெப்புக்கு கொடுக்கப்பட்ட டார்கெட் அச்சிவ்மெண்ட் (Target Achievement) மற்றும் இன்னும் பல.

கொடுக்கப்படும் டார்கெட்டை அச்சிவ் செய்வதற்காக ஓர் மெடிக்கல் ரெப் குறிப்பிட்ட மருந்தை பிரிஸ்கிரைப் செய்யக்கூடிய டாக்டர்களை சந்தித்து அவர்களை கன்வென்ஸ் (Convince) செய்து அந்த பிராண்டை (Brand) பிரிஸ்கிரைப் செய்ய வைக்க வேண்டும். அதொன்றும் இலகுவான காரியம் அல்ல மார்க்கெட்டில் ஒரே மருந்து பல பிராண்ட்கள் பல கம்பெனிகளில் இருக்கும் அவ்வாறான போட்டிமிக்க சூழலில் ஒரு ரெப் (Rep) ஒரு டாக்டரை கன்வென்ஸ் செய்ய அவருடைய பிராண்ட் மற்றைய பிராண்டுகளை விட எந்த வகையில் சிறந்தது என்பதை டாக்டரிடம் விவரிக்கும் திறன் மற்றும் அதற்கான ஆதாரங்களை திரட்டி அவரிடம் சமர்பித்தல் மட்டும் அல்லாது அதன் விலை, செயல்முறை, கொடுக்கப்படவேண்டிய மருந்தளவு (Dosage), பக்கவிளைவுகள் (Side Effects), ஆகிய அத்தனை தகவல்களுடன், கன்வென்ஸ் செய்ய எத்தனிக்கும் டாக்டர் ஏற்கனவே வேறு ஓர் பிராண்டை எழுதும் பட்சத்தில் அந்த பிராண்டின் நிரை, குறைகள் மற்றும் எதன் அடிப்படையில் டாக்டர் அதை பரிந்துரைகின்றார் போன்ற கம்படிடர் டீடேயில்சை (Competitor Details) தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் டாக்டரை கன்வென்ஸ் செய்யும் திறமை இருக்க வேண்டும்.

சரி இப்படி கற்று வைத்த வித்தைகள் எல்லாம் காட்டி டாக்டரை பிரிஸ்கிரைப் செய்ய வைத்தால் மட்டும் போதாது! கொடுக்கப்பட்ட டார்கெட்டுக்கு செல்ல போதுமான பிரிஸ்கிரிப்சன்களை டாக்டரிடம் இருந்து பெறுவதற்கான வேலைகளை செய்ய வேண்டும்! அதற்கு வெறுமனே டாக்டரை சந்தித்து பேசுதல் மட்டும் வேலைக்கு ஆகாது,

ஃபார்மா கம்பெனி லாபம் ஈட்டுகிறது, மெடிக்கல் ரெப்புக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது, சிறந்ததை பரிந்துரைப்பதால் நோயாளர்களும் நன்மை அடைகின்றனர்,  அப்போது அவ்வளவிற்கும் மூலமாக இருக்கும் டாக்டர்களுக்கு என்ன பயன்! பயன் இருக்கிறது, பொதுவாக மல்டி நேஷனல் கம்பெனிகள் (M.N.C – Multi National Companies) டாக்டர்களுக்கு, காசு தருகிறேன் எழுதித்தாருங்கள் என்று டீல் (Deal) போட மாட்டார்கள். அதற்கு பதிலாக டாக்டரின் மேலதிகக்கல்வி (Higher Education), ஆராய்ச்சிகள் (Researches), படிப்பு சார்ந்த பாரின் காண்பிரன்ஸ்களுக்கான (Educational foreign Conferences )செலவீனங்களை கவர் செய்வதுண்டு அதை தவிர இலங்கையை பொறுத்தமட்டில் டாக்டர்கள் பொதுவாக ஸ்பான்சர்ஷிப் (Sponsorship) கேட்பது அவர்கள் பணிபுரியும் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்து கொள்வதற்காகவே இருக்கும். இன்று அரசாங்க வைத்தியசாலைகளின் கிளினிக்குகளில் (Clinic) பெரும்பாலான கதிரை, மேசைகள் கூட இந்த ஃபார்மா கம்பெனிகளின் உபயம் தான். அவை அத்தனையும் மெடிக்கல் ரெப்புகளின் ஊடாகத்தான் நடக்கும். அத்தோடு அவற்றுக்காக கம்பெனிகள் செலவிடும் காசுக்கான வியாபாரத்தை கொண்டுவருவதும் மெடிக்கல் ரெப்புக்கான பிரேஷசர் (Pressure) தான்.    

சரி இதுதான் இவ்வியாபாரத்தின் நேர்வழி என்றால் குறுக்கு வழிகளும் இருக்க வேண்டும் அல்லவா! இருக்கிறது திரைப்படங்களில் காட்டப்படுவதை போல் காசுக்காக கண்டதை கொண்டுவரும் கம்பெனிகளும் உண்டு எழுதும் டாக்டர்களும் உண்டு அதையும் தாண்டி சில ரெப்கள் டாக்டரின் மலிகை சாமான் வாங்குவது முதல் டிரைவர் (Driver) வேலை வரை செய்து கொடுக்கும் வாடிக்கையும் உண்டு. ஏன்னா “சேல் முக்கியம் குமாரு” னு தன் மேனேஜர் போடும் பிரேஷசர் அப்படி இருக்கும். இதில் எவ்வழியிலாவது கொடுக்கப்பட்ட டார்கெட் அச்சிவ் ஆகவில்லை என்றால் சேல்ஸ் காண்பிரன்ஸில் (Sales Conference) வறுத்தேடுக்கப்படுவதுடன் தொடர்ந்தும் வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை எனில் வீட்டுக்கும் அனுப்பப்படுவார். இதன் காரணமாக மாதத்தின் கடைசி இரண்டு மூன்று நாட்கள் இவர்கள் தலை பிரஷர் குக்கராகத்தான் (Pressure Cooker) இருக்கும் டார்கெட் அடிக்கும் வரை.  கிட்டத்தட்ட பந்தைய குதிரை போல் தான் இவர்கள் தொழில் வீரியத்துடன் ஓடும் வரைத்தான் மவுசு! ஆனால் தொழிலை செய்வதோடு மேற்படிப்பையும், திறமையையும் வளர்த்துக்கொண்டு ஒருங்கிணைப்பாளர் (Coordinator), மேனேஜர் (Manager) என்று ஏணியில் மேல்நோக்கி போகும் போது வருமானம், வாழ்க்கை தரம் போன்றவை உயர்ந்து  சமுதாயத்தில் மதிக்கத்தக்க ஒரு நபராய் உயர்த்தும் என்பதில் ஐயம் இல்லை.

“அறிவும் திறமையும் இருந்தால் நீங்களும் ஆகலாம் மெடிகள் ரெப், ஆற்றலும், தூரநோக்கு பார்வையும் இருந்தால் மெடிக்கல் ரெப்பும் ஆகலாம் அம்பானி.”

This Post Has One Comment

  1. hitnspinlogin

    Struggling to get the hitnspinlogin to work. Just been a massive pain trying to log on. Check out hitnspinlogin if you want, but proceed with caution.

Leave a Reply