ஊருக்கு சொல்ல

Nestle & Nescafe Japan Success Story – உளவியல் மார்க்கெட்டிங் வெற்றிக் கதை

Nescafe Japan Marketing Strategyதப்பு கணக்கு

Nescafe Japan Marketing Strategy என்பது ஒரு விடாமுயற்சியின் கதை:  1970 களில் ஜப்பானின் வளர்ந்து வரும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உணர்ந்த நெஸ்லே(Nestle) நிறுவனம், அங்கு ஓர் பெரும் தேநீர் கலாச்சாரம் இருப்பதை கண்டது. தட்டுறம், தூக்குறம் என்கின்ற கணக்கில் தங்களது டிரம்ப் கார்டான நெஸ்காப்பியை(Nescafe) ஜப்பானிய சந்தையில் அறிமுகம் செய்தது

ஜப்பானியர்களுக்கு காபியின் சுவை பிடித்ததிருந்தது ஆனால் நெஸ்காப்பி(Nescafe) சேல்ஸ் சூடு பிடிக்கவில்லை. காரணம் ஜப்பானியர்கள் தேநீர் குடிப்பதில் பிடிவாதமாக இருந்தனர். 

அதை மாற்றுவதற்கான நெஸ்லேயின்(Nestle) மார்க்கெட்டிங் வித்தைகள் எல்லாம் செலவை மட்டுமே வைத்தது தவிர வரவில் எந்த முன்னேற்றமும் இன்றி நெஸ்காப்பி(Nescafe) ஜப்பானிய மார்க்கெட்டை விட்டே வெளியேறியது.

விடா முயற்சி

தட்டுறம், தூக்குறம் என்று என்ட்ரி கொடுத்தவர்களுக்கு இவ்வளவு சீக்கிரம் எண்டு கார்ட்  போடப்படும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. லாபம், நஷ்டத்தை தாண்டி நெஸ்லேயிற்கு(Nestle) இது ஒரு மானப்பிரச்சனை ஆகவும் மாற, ஜப்பானிய மார்க்கெட்டுக்குள் எப்படியாவது நுழைந்திடனும் என்ற வியுகத்தை வகுக்க ஆரம்பித்தனர்.

Nescafe Japan Marketing Strategy யின் ஆரம்பம் 

அதற்காக உளவியலாளரான, டாக்டர் கோட்டே ரிப்பேல் என்பவரிடம் கலந்தாலோசித்தனர். (பொதுவாக நம் ஊரில் ஆலோசனைக்கும், பிரச்சனை தீர்விற்கும் சாமியாரிடம் சென்று சோலி உருட்டி தேசிக்காய் வெட்டுவது வாடிக்கை. அமெரிக்காவில் அரசியல்வாதிகள் முதல் பெரும் காபெரேட் முதலைகள் வரை இவரிடம் மனோதத்துவ ரீதியிலான ஆலோசனைகளை பெறுவர்)

Nescafe Japan Marketing Strategy - Dr. Clotaire Rapailleஅதன் அடிப்படையில் டாக்டர் ரிப்பேல் ஜப்பானிய குடிபாண கலாச்சாரம், வரலாறு, இவை சார்ந்த பழக்க வழக்கங்கள் போன்ற சோலிகளை உருட்டி தற்போதைய ஜப்பானிய சமூகத்திடயே என்ன குட்டிகரணம் போட்டாலும் நெஸ்காப்பியை(Nescafe) விற்க முடியாது என்றார்.

அதற்கான காரணம், நுகர்வோரின் முடிவுகள் பெரும்பாலும் பகுத்தறிவு எண்ணங்களால் அல்லாமல் ஆழ்மன நினைவுகள் மற்றும் உணர்ச்சித் தூண்டுதல்களால் இயக்கப்படுகின்றன என்று கூறினார்.

அவர்களின் கலாச்சாரம் மற்றும் சிறுவயது முதலே அவர்கள் தேநீருக்கு பழக்கப்பட்டிருந்தமையே இதற்கு காரணம் என்றும் பரிகாரமாக இப்போது ஜப்பானிய சிறுவர்களை குறிவைத்து காபி சுவையுடைய இனிப்புக்களை விற்பனை செய்யுங்கள் அதன்பின் இன்னும் 10 வருடத்தில் நெஸ்காப்பியை(Nescafe) ஜப்பான் மார்க்கெட்டில் இறக்குங்கள் அப்போது நீங்கள் தான் ராஜா என்று கூறுகிறார்.

Nescafe Japan Marketing Strategy யின் விஸ்வரூப வெற்றி

டாக்டர் ரிப்பேல் சொன்னதை போன்றதொரு ஐடியாவை நமக்கு யாரும் சொல்லி இருந்தால் நமது ரியாக்க்ஷன் எப்படி இருந்திருக்கும்!! அவ்வளவு பொறுமை நமக்கேது! நமக்கு இன்றைக்கு மரத்தை நட்டால் நாளைக்கு பழம் சாப்பிட வேண்டுமே!

ஆனால் நெஸ்ட்லே(Nestle) நிறுவனம் அப்படி யோசிக்கவில்லை. அவர்கள் டாக்டர் ரிப்பேல் சொன்னதைப்போல் காபி சுவையை ஜப்பானிய சிறுவர்களிடம் விதைக்க KitKat என்ற பிராண்டின் கீழ் காபி சுவையுடைய பல இனிப்பு வகைகளை ஜப்பானில் அறிமுகம் செய்தனர்.Nescafe Japan Marketing Strategy அது மெதுவாக ஜப்பானிய சிறுவர்களின் சுவை நரம்புகளை ஆக்கிரமித்தது.

இப்படியே 10 வருடங்களின் பின் நெஸ்லே(Nestle) நிறுவனம் “கபாலி எப்படி போனானோ அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு” என்று கணக்கா நெஸ்காப்பியை(Nescafe) ஜப்பானிய மார்க்கெட்டில் ரீஎன்ட்ரி கொடுத்தது.

டாக்டர் கோட்டே ரிப்பேல் சொன்ன உளவியல் மேஜிக் நடந்தது. நெஸ்ட்லே(Nestle) நிறுவனம் ஒரு ஜெனரேஷனில் செய்த மாற்றம் இன்று உலகின் அதி தீவிரமாக காபி குடிக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. உலகில் அதிகளவு காபியை இறக்குமதி செய்யும் நாடுகளில் இன்று ஜப்பான் நான்காம் இடத்தில் உள்ளது. 

வருடத்திற்கு 500,000 டன் காபியை இறக்குமதி செய்கின்றது அத்தோடு இன்று ஜப்பானில் இன்ஸ்டன்ட் காபி என்பது பெரும் இண்டஸ்ட்ரி ஆகவே வளர்ந்து விட்டது. அதில் 70% மான மார்க்கெட் ஷேரை நெஸ்காப்பி(Nescafe) தன்னகத்தே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொறுத்தார் பூமி ஆழ்வார்.

இதை போன்று coca cola நிறுவனம் ஒரு simple marketing campaign மூலம் தம் sales ஐ மென்படுத்திய ஒரு சுவாராஸ்சியமான கதையை படிக்க (இங்கு Click செய்யவும்) 

Author – Viky

This Post Has 11 Comments

  1. tai88vin.clup

    Tai88vin.clup’s where the cool cats are playing! If you love the thrill of risk and reward, this is top tier. Check them out: tai88vin.clup

  2. phmaxwin

    Best gaming experience in the PH so far! I really love the variety of slots available here. Definitely giving phmaxwin five stars for the great service.

  3. idarushoki

    This site has a great winning streak lately. I feel like my luck has improved since I switched to idarushoki. Keep it up!

  4. bdppvipgame

    The interface is so clean and easy to navigate that even my mom could figure it out in minutes. Great choices and a very friendly community vibe here. bdppvipgame

  5. erabet88login

    Login is super quick and the dashboard is very intuitive. I can get to my favorite games in seconds. Great job on erabet88login

  6. 6ffcom

    Heard about 6ffcom through a friend – said it’s a solid platform. Gonna check it out and see what all the fuss is about. Hopefully, it lives up to the hype! Check it out 6ffcom

  7. pkp998

    The variety of games here is insane. I spent hours exploring different slots and they are all high quality. pkp998 is where the real action is.

  8. jiliibet

    If you are looking for a variety of slots, jiliibet is where it’s at. I love how they keep updating the game library. It keeps things fresh and exciting every time I log in.

Leave a Reply