UZON Shampoo – ஒரு சிறு மாற்றுச்சிந்தனை

UZON Shampoo Branding Magic – கொரியாவை சேர்ந்த UZON என்னும் ஒரு காஸ்மெட்டிக் கம்பெனி அதைப் போன்ற இன்னும் பல நூறு கம்பெனிகளில் தயாரிக்கும் ஷாம்பு பிராண்டுகளுடன் தமது ஷாம்பூ பிராண்டையும் சந்தைப்படுத்தி வந்தது.
சந்தையில் ஒரு சாதாரண ஷாம்பு பிராண்டாக இருந்த UZON
அவர்களது உற்பத்தி தரமானது தான் என்றாலும் சந்தையில் இருக்கும் இன்னுமொரு ஷாம்பு என்பதைப் போல ஒரு சிறு வியாபாரமாகவே திகழ்ந்தது.
அப்போது அந்த பிராண்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஈட்டுச்செல்ல வேண்டும் என்ற ஈடுபாடுடன் அதற்கான UZON Shampoo Branding டீம் கம்பெனியில் பலரிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டிருந்தது.
அவ்வேளை டிசைனிங் டீமை சேர்ந்து ஒரு நபர் “what if the bottle… didn t look like a bottle” என்கிறார் அதாவது அவர்களது ஷாம்பு போத்தில் ஒரு போத்தலை போல் இல்லாமல் இருந்தால் என்ன என்று கேட்கிறார்.
“Bottle போல இல்லாமல் இருந்தால் என்ன?” – ஒரு சிரிப்பில் பிறந்த ஐடியா

என்பதைப் போல்!
எல்லோரும் சிரித்தனர். ஆனால் UZON Shampoo Branding டீமில் சிலர் அவ் ஐடியாவின் அடிப்படையில் யோசித்தனர்.
உண்மையில் அப்போத்தலின் வடிவத்தை ஒரு பேசுப்பொருளாகி, அதன் அடிப்படையில் அதன் வணிகத்தை மென்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.
அதை அவர்களது டிசைனிங் டீமுடன் கலந்து ஆலோசித்து போத்தலில் மாற்றம் செய்ய முடிவு எடுத்தனர்.
UZON Shampoo Branding – அசாதாரண bottle design
அந்த ஒரு சிறு பொறி தட்டவே UZON கம்பெனியும் அப்போத்தலின் வடிவை கரட் போன்று, மூங்கில் போன்று, வெள்ளரி போன்று மற்றும் இன்னும் சில அசாதாரண வடிவங்களாக மாற்றியது.
அவ்வளவு தான் அந்த தயாரிப்புகள் காட்டுத்தீப்போல் மார்க்கெட்டில் ஹிட் அடித்தது. கூந்தலுக்கு போட ஷாம்பு வாங்குகிறார்களோ இல்லையோ!

டிஃடோக், முகநூல், இன்ஸ்டாகிராமில் போட என்றே பலர் அதை கொள்வனவு செய்ய ஆரம்பித்தனர். Uzon ப்ராடக்ட்ஸ் இன் வியாபாரம் 400% முதல் 700% வரை அசுர வளர்ச்சி அடையத்தொடங்கியது.
சந்தையின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி செய்ய முடியாத அளவிற்கு UZON கம்பெனி திணறியது.
Market Share & Brand Value உயர்வு
இதை பார்த்து இன்னும் சில கம்பெனிகள் கேப்பில் கிடா வெட்டிடலாம் என்று UZON இன் போத்தல் ட்ரிக்கை கையில் எடுத்தது. அவர்களை போன்றே போத்தலில் மாற்றம் செய்து மார்க்கெட்டை பிடிக்க பார்த்தது.
ஆனால் UZON இன் புகழ் மற்றும் மார்க்கெட் ஷேர் உலகில் தமக்கென்று ஒரு இடத்தை பிடித்தத்துடன் பல பெண்களின் பிடித்தமான ஷாம்பு போத்திலாயும் மாறி உள்ளது.

ஒரு சிறு மாற்றுச்சிந்தனை
ஒரு சிறு மாற்றுச்சிந்தனை போதும் சரித்திரமாக

Bombing fishing, huh? That sounds like some seriously explosive fun! I gotta give it a try. Wish me luck! Dive in with bombing fishing!
Pingback: Golden Ratio Tamil Explanation - Golden Ratio என்றால் என்ன?