ஊருக்கு சொல்ல

Marigold (சாமந்திப்பூ) விவசாயம் – இலங்கையில் தாய்லாந்து மாரிகோல்டு வளர்ப்பு வழிகாட்டி

Marigold Farming in Sri Lanka- மாரிகோல்டு (Marigold) தமிழில் சாமந்திப்பூ என்பது இலங்கையில் பூஜைகள், கோயில்கள், திருமணங்கள், விழாக்கள், அலங்காரங்கள் ஆகியவற்றில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பூவாகும். அதில் தாய்லாந்து மாரிகோல்டு (Thailand Marigold) வகைகள் சாதாரண மாரிகோல்டு வகை பூக்களைவிடவும் அளவில் பெரிய பூவாகும் (மொட்டில் இருந்து 12 முதல் 15 நாட்கள் வளர்ந்த ஒரு மலர், கிட்டத்தட்ட ஒரு கைப்பிடி அளவிற்கு பெரிதாகும்) அவை நல்ல நிறம், நீண்ட நாட்கள் (கிட்டத்தட்ட 4 நாட்கள்) வாடாமல் இருப்பதால் இலங்கை சந்தையில் தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளன.Marigold Farming in Sri Lanka

இலங்கையின் வெப்பமண்டல காலநிலை (tropical climate) மாரிகோல்டு வளர்ப்பிற்கு மிகவும் ஏற்றது.

இந்த விவசாயத்தை எப்படி தொடங்குவது?

Marigold Farming ஒன்றும் ராக்கெட் சயன்ஸ் கிடையாது. மிகவும் எளிமையான முறையில் ஆரம்பிக்கக்கூடிய ஒரு பயிர்செய்கை ஆகும். 

நிலத்தேர்வு

  • நல்ல சூரிய ஒளி கிடைக்கும் இடம்
  • நீர் தேங்காத மண்
  • வீட்டு தோட்டம், வெற்று நிலம், சிறிய வயல் போன்றவை இதற்கு ஏற்றது

1/4 acre அல்லது 10–15 perch இருந்தால் கூட இவ்விவசாயத்திற்கு போதுமானது.

மண் தயார்படுத்தல்

பொதுவாக மாரிகோல்டு களிமண் தவிர்த்து சாதாரணமான எந்த மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதனை ஒரு லாபமீட்டும் நோக்குடனான விவசாயமாக மேற்கொள்ளும் போது அவை செழிப்பாக வளரக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவது சிறந்த பெருபேறுகளை தரும்.

  • மணல் கலந்த செம்மண் (sandy loam) சிறந்தது
  • மண்ணின் pH: 6 – 7 அளவில் இருப்பது மிகச்ச்சிறப்பு

அவ்வாறான மண்ணை நன்கு உழுது:

மாடு சாணம் / கம்போஸ்ட் இட்டு கலந்து சிறிதளவு சாம்பல் சேர்த்து தயார்படுத்திக்கொண்டால் நல்ல விளைச்சளை பெறலாம்.

விதை / நாற்று தேர்வு

இலங்கையில் தற்போது கிடைக்கும் மாறிகோல்டு வகைகள்:

  • Thailand Hybrid Marigold
  • Big Yellow / Orange Marigold

விதைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:

  • விவசாயத் துறை அலுவலகங்கள்
  • அரச மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள்
  • தனியார் கன்று விற்பனை நிலையங்கள்

 பராமரிப்பு

  • தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சுதல் அவசியம்
  • 15–20 நாட்களுக்கு ஒருமுறை உரம் இடுதல் அவசியம்

மாரிகோல்டு தாவரத்தை பூச்சி தாக்குவது குறைவு (மற்ற பயிர்களை விட) ஆகவே பராமரிப்பில் சுதந்திரம் உண்டு அத்தோடு பயிர் செய்து 60–70 நாட்களில் பூ அறுவடை ஆரம்பம் ஆவது சிறப்பான ஒரு அம்சமாகும்.

இலங்கையில் மாரிகோல்டு சந்தை எப்படி உள்ளது?

மாரிகோல்டு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு தாவரம். ஆயுள்வேத மருத்துவம் மற்றும் காஸ்மெட்டிக் (Cosmetic) மருந்து தயாரிப்பிலும் பாவிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் அவ்வாறான பயன்பாடுகள் குறைவு தான். ஆனால் மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியும் என்ற காரணத்தினாலும், கண்கவர் அழகின் காரணமாகவும் கோயில்கள் & புத்த விகாரைகள், திருமண மண்டபங்கள், மலர் கடைகள், தினசரி பூ சந்தைகள் ஆகியவற்றில் பெரும் கேள்வி ஒன்று உருவாகியுள்ளது. 

  • சில கிராமங்களை அண்டியுள்ள பூக்கடைகளில் அங்குள்ள வீடுகளில் பூக்கும் சாதாரண மாரிகோல்டு மலர்களை மலருக்கு 5 முதல் 8 ரூபாய்வரை கொடுத்து வாங்கும் வாடிக்கை உருவாகியுள்ளது.
  • தாயிலாந்து மாரிகோல்டு hybrid மலரின் தற்போதைய மார்க்கெட் விலை 15-20 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பொதுவாக ஒரு செடியில் கிட்டத்தட்ட 15-25 மலர்கள் பூக்கக்கூடும்.
  • கிட்டத்தட்ட 700 செடிகளில் கிழமைக்கு 10,000 மலர்களை பறிக்க முடியும்.

தேவை அதிகரிக்கும் காலங்கள்

  • பௌர்ணமி நாட்கள்
  • திருமண சீசன்
  • அரசியல் / கலாச்சார நிகழ்வுகள்

குறிப்பாக மஞ்சள் மாரிகோல்டுக்கான தேவை வருடம் முழுவதும் இருக்கக்கூடியது.

ஆரம்ப முதலீடு (Sri Lanka Estimate)

20 பேச்சேஸ்இற்கான உதாரண கணக்கு

விதைகள் / நாற்றுகள் – 4,000

மண் தயாரித்தல் – 5,000

உரம் & பூச்சி மருந்து – 4000

நீர் & பிற செலவுகள் – 2,500

மொத்த முதலீடு – 11,500

வருமானம்

  • ஒரு செடியிலிருந்து: 15–25 பூக்கள்
  • 20 perches = 700 – 1000 செடிகள்
  • ஒரு பூவின் விலை: LKR 15 – 20

ஒரு harvest இல் கிடைக்கும் வருமானம்: 105,000 (குறைந்தது)

மாதத்திற்கு 3–4 harvest செய்ய முடியும்

இதை ஒரு பகுதி நேர தொழிலாக செய்ய முடியுமா?

வீட்டின் அருகிலேயே உங்களுக்கு பயிர் செய்யக்கூடிய நிலம் இருப்பின் பகுதிநேரமாக நிச்சயம் செய்யலாம். இதற்கு அதிக பராமரிப்பு தேவை படாததன் காரணத்தாலும் வேகமாக பணம் திரும்ப பெறக்கூடிய முதலீடு என்பதாலும் (2–2.5 மாதம்) பகுதிநேர தொழிலாக மிக சிறிய அளவில் தொடங்க உகந்த தொழில் இது.

கூடுதல் குறிப்புகள்

  • நேரடியாக மலர் கடைகளுக்கு விற்றால் அதிக லாபத்தை பெறலாம்
  • வெசாக் & பூஜை காலங்களில் சிறந்த சந்தை வாய்ப்புக்களை பெறலாம்,
  • Organic முறையில் பயிர் செய்தால் செலவு குறைவாகவும் வருமானம் அதிகமாகவும் இருக்கும்.

சரியான திட்டமிடல் இருந்தால், Marigold Farming in Sri Lanka முழுநேர தொழிலாகவும் வளரக்கூடியது.

சமந்திப்பூ சாதாரணமாக வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்பட்ட ஒரு பூச்செடி ஆகும். இன்று அதற்கு அதிகரித்திருக்கும் இருக்கும் இந்த கேள்விக்கான காரணம் அதன் அழகு என்றால் மிகை ஆகாது. 

அப்படி மனிதனின் கண்களுக்கு ஒரு பொருள் அழகாக தெரிவதற்கான கணிதம் ஒன்று உள்ளது அதை தெரிந்து கொள்ள (இங்கு Click செய்யவும்)  

Author – Viky

This Post Has 10 Comments

  1. pk88betvn

    Alright, pk88betvn time to roll the dice! New place to test my luck, let’s see what happens. Check it out here: pk88betvn

  2. tm68

    TM68, got hooked on this one by a friend. Layout is simple, games are fun and withdrawals are pretty quick. I like the regular promotions! Try your hand with tm68.

  3. mx37

    MX37, another one of those sites. Nothing really stands out, but also nothing really wrong with it. If you are looking for something simple this is it! More information is on mx37

  4. 333okbet

    Hey guys, just gave 333okbet a shot and it’s pretty decent! Found some cool games and the site’s easy to navigate. Might be worth checking out for a quick spin. 333okbet

  5. 11winvn

    11winvn knows how to treat the local players right. The payouts are fast and I have never had any issues. They are always willing to help! 11winvn

  6. 168fbet

    168fbet is top tier. If you guys want the best experience, look no further. I have been around the block and by far, 168fbet ranks the absolute top! 168fbet

  7. 1win aviator download

    Seriously, that 1win aviator download. This should be everyone’s favorite. The graphics are incredible, very engaging. It’s my daily dose of fun and potential winnings. 1win aviator download

  8. sambacasinoslots

    Sambacasinoslots is pretty fun if you’re into slots like me. Good selection, colorful graphics, and easy to navigate. I’d recommend giving it a shot. See if sambacasinoslots is your cup of tea!

  9. soicauwin888

    Alright guys, Soicauwin888 is something I’ve been trying out. Could be worth it if you are looking at predictions in casino games. Explore soicauwin888 before diving deep!

  10. 88okbet

    88okbet? Been meaning to check this one out! I’ve heard some good things about their sports betting odds. Might be worth a shot if you’re looking for a solid bookie. Check those odds at 88okbet.

Leave a Reply