RCC Cafe Dubai – Remote Control Cars மூலம் உருவான Unique Startup Idea

வயதளவிலும், உடலளவிலும் வளர்ந்தாலும் சில சமயங்களில் மனதளவில் சிறு பிள்ளைத்தனமாகவே செயற்படுபவர்கள் ஆண்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த காண்செப்ட்டை ஒரு புதிய தொழில் முயற்சியாக்கப்பட்ட ஓர் ஸ்டார்டப் தான் RCC Cafe Dubai
90s Kids கனவு – ரிம்மோட்டு கார்களின் மீது உள்ள காதல்
RCC Cafe Dubai – இன்று 90s கிட்சை பற்றிய பல மீம்கள் உலாவருவதுண்டு. அதில் ஒன்று தான் 90s கிட்ஸ் இன் மிகப்பெரிய கனவாக அந்த காலம் தொட்டு இன்று அவர்களுக்கு குழந்தைகள் இருப்பினும் கலையாத கனவான ரிம்மோட்டு கார்கள் மேல் கொண்ட காதல்.
RCC (RC Cities Café and Gaming Venue) – துபாயில் பிறந்த ஐடியா
ரிமோட் கண்ட்ரோல் Cars Concept ஐ பயன்படுத்தி துபாயை சேர்ந்த rcc (rc cities café and gaming venue) என்ற கஃபே அவர்களது கஃபேக்கு நடுவே ஓர் மணல் நிறைந்த திட்டை உருவாக்கி அம்மணல் திட்டில் ரிம்மோட்டு மூலம் செயற்படுத்தக்கூடிய கார்கள், ஜே. சீ. பீ. கள் மற்றும் கட்டிட வேலைகளில் ஈடுபடுத்தும் வாகன இயந்திர விளையாட்டு பொருட்களை வைத்துள்ளனர்]. அங்கு கஃபேக்கு வரும் வாடிக்கையாளர்கள் அந்த திட்டை சுற்றி நின்று இவற்றை ரிமோட்கண்டிரோல் ஜாய் இஸ்திக்குகள் மூலம் இயக்கி விளையாடி மகிழலாம்.
RCC Cafe உரிமையாளர்கள் சொல்லும் கான்செப்ட்
RCC Cafe Dubai யின் உரிமையாளர்கள் தெரிவிப்பதன் அடிப்படையில் “துபாயில் கட்டிட நிர்மானப்பணிகள் என்பது ஓர் கலை அம்சமாகவே மாறிவிட்டது. நாலாபுறமும் கட்டிட வேலைப்பாடுகளை காணக்கூடியதாக இருக்கும். அவ்வாரான ஒரு சிட்டியில் நம் வாடிக்கையாளர்கள் மேகத்தில் அமர்ந்தபடி ஒரு அருமையான காபியை அருந்திக்கொண்டு அக்கட்டிடநிர்மாண கலையில் ஈடுபடுவதாக உணரச்செய்யக்கூடிய ஒரு முயற்சி இது” என கூறுகிறார்.
உங்கள் சொந்த RC கார்களும் வரவேற்கப்படுகின்றன
மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் தமது சொந்த ரிம்மோட்டு கார்களை அங்கு கொண்டுவந்து விளையாடியும் மகிழலாம் என்கிறார். ஆகவே பலரும் தங்களது விளையாட்டு பொருட்களுடன் இங்கு வந்து சிறு பிள்ளைகள் போல் விளையாடி வருகின்றமையை காணக்கூடியதாக இருக்கின்றது.
உணவு அல்ல – அனுபவமே பிரதான பிஸினஸ்
நீங்களும் இதை கூகுள் செய்து பார்க்கலாம் (Click Here). அங்கு பதிவிடப்பட்டிருக்கும் ரீவிவ்களின் அடிப்படையில் நாம் கவனித்த ஒரு விடயம் தான் அது ஒரு கஃபே என்றாலும் அங்கு உணவிற்கும், காபிக்கும் கொடுக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் என்பது சொல்லும் அளவிற்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்தில் கஃபேக்கு என்று இடவசதியும் மிகக்குறைந்த அளவே உள்ளது
என்பதை போல் ரிம்மோட்டு கார்களை இயக்குவதற்கான இடம் தான் அவர்களின் பிஸினசே! அதில் அவர்கள் வெற்றியும் ஈட்டியுள்ளனர் என்றே கூறலாம்.
2024ல் ஆரம்பித்து உலக கவனம் பெற்ற RCC Cafe Dubai
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட RCC Cafe இன்று உலகளவில் பிரசித்திப்பெற்று வருகிறது. இதுவே துபாயில் ஒரு சாதாரண கஃபே ஆரம்பிக்கப்பட்டது என்றால் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கப்போகிறது!
மாற்றி யோசித்தால் மார்க்கெட் உங்களது
அக் கஃபேக்கு இவ்வாறு ஒரு சிறு காண்செப்டை உள்ளடக்கியதன் மூலம் உலகளவில் பேசுப்பொருளாகி போனது என்பதின் ஊடாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது
“ஈரை, பேனாக்கி, பேனையும் பெருமாளாக்கலாம் மாற்றி யோசித்தால்”
இதை போன்று Coca Cola கம்பெனி மாத்தி யோசித்து செய்த ஒரு Marketing Campaign பற்றி படிக்க (இங்கு Click செய்யவும்)
Author – Viky

888gamevn’s user interface is so clean and modern. Makes betting a breeze! Plus their customer service team is super helpful. Jump into 888 with 888gamevn
Hey, ever heard of bullsbet? It’s one of those platforms you should check to compare odds, don’t stick to just one thing, lads! Worth a look See what you think! bullsbet
MQMBet? Never heard of it before, to be honest. Might be a newer platform. Always be careful with new sites, and make sure they’re properly licensed before you start betting. You can find their site at mqmbet. Proceed with caution!
Yo, if you’re looking to get into 20Bet, 20betlogin.info is a good starting point. Helped me get in and start betting. The platform is pretty solid once you’re in. Good luck out there! 20betlogin