Coca Cola Marketing Strategy – Friendly Twist Campaign Masterclass
Coca Cola Friendly Twist Campaign- “சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்“ அப்படித்தான் Coca Cola என்றாலும்!, பிறக்கும் குறைந்தை கூட போன ஜென்மத்தில் நிச்சயம் குடித்திருக்கும். அப்படிப்பட்ட வியாபார ஜாம்பவான் இன்னுமே தங்களது பிராண்டை(Brand), ப்ராடக்ட்டை(Product) மார்க்கெட்டிங்(Marketing) செய்துகொண்டு தான் இருக்கிறது. காரணம் வியாபாரம் ஒன்றை துவங்கி வெற்றி அடைவதை விட அதை தக்க வைப்பதில் தான் வித்தையே இருக்கிறது என்பதால்.
ஏன் Coca Cola இன்னும் நம்பர் ஒன் பிராண்டாக இருக்கிறது?
இன்று Cokeஐ கொண்டு கழிவரையை கழுவினாலும், ரொனால்டோ பிரஸ் காண்பரேன்ஸில் தள்ளிவைத்த Cokeஆல் அதன் பங்குகள் சரிந்தாலும், அதனை குடிப்பதால் உடல் நலத்துக்கு கேடு என்று எங்களுக்குமே தெரிந்தாலும் இன்னுமே குடிநீருக்கு டப் கொடுக்கும் டிமாண்டில் வைத்திருப்பது அந்த மார்க்கெட்டிங் தான்.
சாதாரணமாக ரோட்டு கையேந்தி பவனில் “Coke இன்றி சாப்பாடு வேண்டாம்” என்ற சாதாரண போஸ்டர் கேம்பேன்(Poster Campaign) முதல் நாம் சொல்லப்போகும் மாஸ்டர் கிளாஸ் கேம்பேன் வரை அப் பிரண்டை நம்மோடு கூடவே பயணிக்க வைத்துள்ளது.
2014ல் நடந்த Coca Cola-வின் Iconic Marketing Campaign
2014 இல் செய்யப்பட்ட சிறப்பான தரமான சம்பவம் தான் இது.
முதல் நாள் காலேஜ் – எல்லோருக்கும் பொதுவான ஒரு உணர்வு
உங்களுக்கு பாடசாலை அல்லது காலேஜின் முதல் நாள் நினைவிருக்கிறதா! வாய்கள் பூட்டப்பட்ட மௌனம், யாரோடு கதைப்பதென்ற குழப்பம் ஆகிய உணர்வுகள் எல்லோரையும் எல்லோரிடமும் தள்ளி வைத்திருக்கும். இதை கான்செப்டாக(Concept) வைத்து ஒரு மார்க்கெட்டிங் கேம்பேன் (Marketing Campaign) செய்யணும் என்றால் இன்றைய ஐடியா மணி ChatGPT யிடம் கேட்டால் கூட மொக்கையாக “let’s make friends with coke” என்று போஸ்டர் அடி, புது பிரண்ட(Friend) பிடி அவனோட கோக்க குடி என்றெல்லாம் பேசிக் ஐடியாக்களை(Basic Ideas) கொடுக்கிறது. ஆனால் அன்று இவர்கள் செய்த தரமான சம்பவம் பின்வருமாறு:
“Coca Cola Friendly Twist Campaign” – Coke செய்த Masterstroke
இதற்கு “Friendly Twist” என்று பெயரிட்டு சாதாரணமான Coke பாட்டிலின் மூடியை மாற்றி
அந்த பாட்டில்களை முதல் நாள் காலேஜ் வரும் ஸ்டுடென்ட்களுக்காக(Student) சில காலேஜ்களின் பொது வெளிகளில் வெண்டிங் மெஷின்கள்(Vending Machine) மூலம் அவைளபில்(Available) செய்தனர். அவ்வளவு தான் தாறு மாறு தக்காளி சோறு, சேல்ஸ் உசேன் போல்ட் ஆனது, சோசியல் மீடியா முழுக்க இது வைரலும் ஆனது.
ஒரு Bottle Cap எப்படி நட்பை உருவாக்கியது?
மூடிய மாத்துனதுக்கு எப்படிப்பா இவ்வளவு சீனுனு யோசித்தால் அங்கு தான் ட்வீஸ்ட்(Twist) இருக்கிறது! அவர்கள் அப்பாட்டில்களில் புது விதமான மூடியோன்றை உபயோகித்திருந்தனர். அவ் Coke பாட்டிலை கொள்வனவு செய்யும் ஒருவருக்கு அந்த பாட்டிலை தனியாக திறக்க முடியாதபடி உருவாக்கப்பட்டிருந்தது, அதாவது அப்பாட்டிலை திறப்பதற்கு அதே வகையான இன்னொரு மூடி இட்ட பாட்டில் தேவைப்பட்டது. அப்படி இரண்டு பாட்டில் மூடி தலைகளையும் ஒன்றாக பொருத்தி ஆளுக்கொரு பக்கம் திருப்பும் (twist) போது திறப்பதற்கான மேஜிக் நிகழ்ந்தது. அவ் மூடித்திறப்பு யாரென்றே தெரியாத இருவருக்கு இடையில் ஒரு நட்பின் திறப்பாகவும் இருந்தது.
Sales + Social Media = Viral Success

இப்படி ஒரு Cokeஐ எடுத்தற்காக இன்னொருவரோடு கதைக்க, இன்னொருவரோடு கதைக்கவென்றே ஒரு Cokeஐ எடுக்க என்று Cokeஇன் சேல்ஸ் ஹிட் அடிக்க, இந்த fun ஆன மேட்டரை ஸ்டுடென்சே சோசியல் மீடியா முழுக்க மார்க்கெட்டிங் செய்தும் கொடுத்தனர்.
Coca Cola Friendly Twist Campaign ற்கான விளம்பர வீடியோ யூடியூபில் பல மில்லியன் பார்வைகளை பெற்றது. முதல் நாள் காலேஜ் போகின்றவர்கள் மட்டுமன்றி இதை கேள்விபட்ட பலரும் இதை தேடி வாங்கினர். உண்மையில் இது Coca Colaவின் ஒரு ஐகானிக் கேம்பேனும்(Iconic Campaign) ஆனது.
ஏன் Coke இன்னும் நம்பர் ஒன்?
“இப்படிப்பட்ட தரமான செய்கைகளினால் தான் யார் கழுவி ஊற்றினாலும், களீஜ் என்று தூற்றினாலும் நம்பர் வன்(Number One) இடத்தை விட்டு இறங்காமல் இருக்கிறது கோகோ கோலா எனும் உயிர் கொல்லி!”
இதை போன்று Nestle நிறுவனம் Nescafe ஐ ஜப்பானிய மார்கெட்டுக்குள் அறிமுகம் செய்த ஒரு சுவாராஸ்சியமான கதையை படிக்க (இங்கு Click செய்யவும்)
Author – Viky

Downloading Jiliparkdownload now! Ready for some top-notch gaming action. Fingers crossed for some big wins! Start playing at jiliparkdownload!
Pingback: Nescafe Japan Marketing Strategy | தமிழ்
Pingback: RCC Cafe Dubai Success Story | RC Cars Cafe (Tamil)
Pingback: Third World War Water Crisis : நீருக்கான உலக அரசியல்
I’ve tried a few platforms but this one is surprisingly smooth. The interface is clean and the payouts are fast. Highly recommend checking out own777app if you want a hassle-free experience.
The variety of games here is insane! I spent hours exploring different slots and the graphics are top notch. Super fun time at okbeyslot.
I am really enjoying the bonuses they offer for new users. It is a great way to start. The app is very stable too. Check out 168jlloginapp
Really impressed with the customer support team. They solved my deposit issue in minutes. Five stars for idrafi99
The app version is a total game changer. So much easier to navigate on my phone than the web version. Grab the app at k777bdapk now.