ஊருக்கு சொல்ல

21ஆம் நூற்றாண்டின் மூன்றாம் உலகப்போர் – நீருக்கான உலகப் போர்

Third World War Water Crisis

Third World War Water Crisis – இருபதாம் நூற்றாண்டின் போர்கள் எண்ணெய்க்கானதாக இருந்தது. எண்ணெய் வளம் மிக்க நாடுகள் செல்வத்தில் செழித்துக்கிடக்க, வல்லமை படைத்த நாடுகள் அவ்வள நில அபகரிப்புக்காக போர்களை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் கதையே வேறு! இன்று மூன்றாம் உலகப்போர் (Third World War) என்று ஒன்று உருவாகினால் அது நிச்சயமாக நீருக்கானதாக (Water Crisis) இருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள்.

நீருக்கான போர் – அறிஞர்கள் எச்சரிக்கைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஸ்மயில் செராகல்தீன் 1995இல் கூறுகிறார் “21 ஆம் நூற்றாண்டின் போர்கள் தண்ணீருக்கானதாக இருக்கும், அதை கையாள பழகிக் கொள்ளாவிடின்” என்று.

2001 இல் ஐக்கிய நாடுகள் சபையில் முன்னாள் பொதுச் செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்கள் கூறுகிறார் “தண்ணீர் பற்றாக்குறை பதற்றங்களுக்கும், மோதல்களுக்கும் வழிவகுக்கும்” என்று.

உலக நீர் வளம் – உண்மையான தட்டுப்பாடு

காலநிலை மாற்றமும், சனத்தொகை பெருக்கமும் நீருக்கான கேள்வியை அதிகரித்து தட்டுப்பாடிற்கு வழி வகுத்துக் கொண்டிருக்கின்றன. நீரால் சூழ்ந்த ஓர் கோலமாக உலகம் இருப்பினும் உலகில் உள்ள நீரில் நூற்றில் 0.007% மட்டுமே மனித பாவனைக்கு உகந்த நீராக உள்ளது.

எது எப்படி என்றாலும் நீருக்கான மூன்றாம் உலகப்போர் (Third World War) மூளும் என்பதெல்லாம் ஓவராக இல்லையா! என்று தோன்றுகிறதா சரி அதற்கான அறிவுப்பூர்வமான ஆதாரங்கள் இதோ!

மனித உரிமையிலிருந்து மல்டி-டிரில்லியன் வியாபாரமாக மாறிய நீர்

நீர் மனிதனின் இன்றியமையாத ஓர் அடிமட்ட தேவை. அதனால் அதை ஒரு மனித உரிமையாக கருதப்படுகையில் காப்பரேட்டுகள் நீரை ஒரு மல்டி டிரில்லியன் வணிகமாக பார்த்தது. ஆனால் சும்மா கிடைக்கும் நீரை நமக்கு விற்றால் வாங்கும் அளவிற்கு முட்டாளா நாங்கள்!

கோகோ கோலா, பெப்சி, நெஸ்லே – நிலத்தடி நீரின் வணிகம்

அதனால் கார்ப்பரேட்டுகள் “ஒரு பிரச்சனைக்கான தீர்வு ஒரு பிசினஸ்” என்ற வியாபார யுக்தியை கையில் எடுத்தது. கோகோ கோலா, பெப்சி, நெஸ்லே போன்ற கார்ப்பரேட்டுகள் இலவசமாக அல்லது மிகக் குறைந்த விலையில் நதிநீரையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி தண்ணீருக்கான மாற்று பொருளாக சில பொருட்களை சந்தைபடுத்தி லாபம் ஈட்டத் தொடங்கின.

வியாபாரதில் வித்தைகள் காட்டும் கோகோ கோலா நிறுவனம் செய்த ஒரு தரமான Marketing Campaign – Friendly Twist 

ஆனால் நீருக்கான மாற்றுப்பொருள் என்ற உருட்டை நீண்ட காலத்துக்கு உருட்ட முடியாது என்று உணர்ந்து, சாதாரண தண்ணீரை 300 பில்லியனுக்கும் அதிகமான லாபமீட்டும் உலக வர்த்தகமாக மாற்றுகிறது.

சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன 1:10000 என்ற விகிதத்தில் இதன் லாபம் இருப்பதாக. இன்றைக்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பல ஆபிரிக்க நாடுகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன தங்களுக்கான விவசாயத்தை செய்யக்கூடிய நீர் இல்லாமல், வற்றிய ஆறுகள் மற்றும் கிணறுகளை வைத்துக்கொண்டு விவசாயிகள் 20 மீட்டரில் ஆழ்துளை குழாயிட்டால், இக்காப்பரேட்டுகள் 100 மீட்டரையும் தாண்டி துளையிட்டு நீரை உறிஞ்சிக்கொள்கின்றது.

டசானி – போத்தல் நீரின் ஆரம்பம்

1997-ல் கோக்கோ கோலா கம்பெனி “டசானி” என்று போத்தல் அடை குடிநீரையும் சந்தைப்படுத்துகிறது. இன்று அது ஒரு பில்லியன் டாலர் பிசினஸ்.

இலங்கையில் போத்தல் நீர் – ஒரு ஆடம்பர வியாபாரமாக மாறிய கதை

மேலைத்தய நாடுகளில் நூதனமான முறையில் எதை வேண்டுமானாலும் விற்று விடலாம். ஆனால் இலங்கையில் நமக்கு தெரிந்த காலத்திலிருந்து கிணறுகளிலும், ஆறுகளிலும் நீர் எடுத்து பாவித்து வந்தோம். அது எப்படி இவ்வளவு நீர் வளம் மிக்க ஒரு நாட்டில் போத்தல் நீரை விற்பனை செய்தான்!

90களில் பாட்டில் நீர் நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான ஒரு ஆடம்பரப்பொருளாக இருந்தது. இங்கு வரும் வெள்ளையர்கள் ஒவ்வொருவரினதும் கையிலும் அவை இருக்கும். விலையும் அதிகமாக தான் இருக்கும்.

நம் போன்ற ஆசியவாசிகளுக்கு மேலைத்தைய மோகம் ஓர் தீரா நோய் தானே. அப்படி இங்கு வரும் வெள்ளையர்கள் போத்தல் நீரை கையில் வைத்து அலைந்தது ஓர் வியாபாரம் நுற்பமே, ஆசையை தூண்டும் வியாபார யுக்தி.

அப்படி குடிநீரை விளம்பரப்படுத்தி இலங்கையில் நம் ஊர் ஊற்றுக்களிலேயே நீர் உறிஞ்சி நமக்கே விற்றுத்தள்ள தொடங்கினான். 

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு – நீர் உறிஞ்சும் வணிகம்

இதில் காமெடி என்னவென்றால் வீட்டை சுற்றி ஊரும் தன் ஊற்று நீரை அள்ளி பாட்டிலில் அடைத்து கொழும்பில் விற்பனை செய்ய அதை வாங்கி கையில் வைத்துக் கொண்டு விடுமுறைக்கு வீட்டுக்கு வருவான் மலைநாட்டு பையன்! 

அப்படி ஆடம்பரத்திற்காக குடிநீர் என்ற கான்செப்டில் பல உள்நாட்டு காப்பரேட்டுகள் இவ் வியாபாரத்தில் நுழைந்தது. அப்போது ஒரு லிட்டர் குடிநீரின் விற்பனை விலை லீட்டருக்கு 30-35 ரூபாவாக இருந்தது. கடைக்கு போடும் விலை 13 – 17 ரூபாவாக இருந்தது. இந்த பிராஃபிட் மார்ஜின் (Profit Marjin) பிடித்து போய் ரொட்டிக்கடை முதல் பெட்டிக்கடை வரை வியாபாரம் விஸ்தீரமானது.

இருந்தாலும் அவர்களுக்கு கிராமங்களில் இவ் ஆடம்பரத்தை விற்பனை செய்ய முடியாமல் இருந்தது. அதற்கான ஸ்பெஷல் உருட்டொன்றை உருட்டிய காப்பரேட்டுகளின் கைக்கூலிகள் “உங்கள் கிணற்று நீரின் கடினத்தன்மை அதிகம் என்பதால் உங்களுக்கு சிறுநீரகக்கல் உருவாகிறது” என்று கொளுத்திப் போட்டான். அவ்வளவு தான்  இன்று பல கிராமங்களில் கிணறுகள் பாலடைந்தும், மூடப்பட்டும் போனது.

வீட்டுக்கு பின்னால் கிணறு வீட்டுக்கு பக்கத்தில் ஆறு ஆனால் அவன் குடிப்பது காசு கொடுத்து பில்டர் நீறு!

ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் நீரின் கடினத்தன்மை சிறுநீரக கற்களை உருவாக்கும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

UK Biobank ஆய்வு – உண்மையான அறிவியல்

யூ.கே பயோ பாங்கின் (UK Biobank)  ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது, “உங்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்கனவே உருவாகி இருக்கும் பட்சத்தில் நீரின் கடினத்தன்மை அதை மேலும் ஊக்குவிக்கிறதே தவிர நீரின் கடினத்தன்மையால் தான் சிறுநீரக கற்கள் உருவாகிறது என்று இல்லை” என்று.

இதுவும் ஒருவகையில் ஜல்லிக்கட்டை நிறுத்து அது மிருகவதை! என்று உருட்டிய உருட்டை போன்றதோர் வியாபார யுக்தி தான்.

தங்கம், எண்ணெய், நீர் – மனிதன் சண்டையிட்ட வளங்கள்

எப்போதுமே வரையறுக்கப்பட்ட வளங்களுக்கு இருக்கும் கேள்வி உலகில் பெரும் வணிக சாம்ராஜ்யங்களை உருவாக்கக்கூடியாது. அதுவே தங்கம் என்ற உலோகத்தின் பின் மனிதனை பித்து பிடித்து அலையச்செய்தது. பண்டைய காலம் தொட்டு இன்றுவரை தங்கத்திற்கான மதிப்பும் கேள்வியும் குறையவே இல்லை.

அப்படிப்பட்ட தங்கத்தை ஒட்டியே 16ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை பல போர்கள் நிகழ்ந்தன. அப்படியே 20 ஆம் நூற்றாண்டில் மனிதனின் கண்ணோட்டம் கருப்பு தங்கம் எனப்படும் கச்சா எண்ணெய் (Crude Oil) மீது விழுந்தது. அதற்கான பல ராஜதந்திர யுத்தங்கள் பூத்தது.

அவ் எண்ணெய் வளமும் முடிவுக்கு வரும் காலம் மிகத் தொலைவில் இல்லை என்பது புரிந்து கொண்டதால் மட்டும் அல்ல நீரின் அவசியம் என்பது தங்கம் போன்றோ எண்ணெய் போன்றோ கடந்து போக முடியாத ஒன்று, என்பதை மனிதன் உணர்ந்து கொள்கிறான்.

அதன் அடிப்படையில் நீர் எனும் நீலத்தங்கம் வெறும் தாகம் தீர்க்கும் ஒரு பொருள் என்பதை தாண்டி, இந்நீரின் இருப்பை உறுதி செய்பவன் தான் வல்லரசாகப்போகிறான் என்றதோர் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.

சீனா, அணைகள், நதிநீர் அரசியல்

அதனால் தான் வல்லரசு போட்டியில் முன்னிலை வகிக்கும் சீனா போன்ற நாடுகள் நதிநீர் அணைகளை தாறுமாறாக கட்டிக்குவிக்கின்றன.

நீர் – புதிய Status Symbol

கடைசியாக நீர் எப்படிப்பட்ட ஓர் ஆடம்பரப்பொருள் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக, பணக்காரர்கள் தமது ஸ்டேடஸ் சிம்பளாக(Status Symbol) ரால்ஸ் ராபிஸ்(Rolls Royce) கார் வைத்திருத்தல், கிராஃப் டையமட்ஸ் கைக்கடிகாரம் (Graff Diamonds) கட்டுதல் போன்ற வரிசையில் இன்று “முன்னனியில் கிரிக்கட் வீரர் விராட் கோலி விலை உயர்ந்த ஏவியன்(evian) பாட்டில் நீரைத்தான் பயன்படுத்துகிறார்” என்பதும் ஒரு ஸ்டேஸ் சிம்பள் ஆகி இருப்பதனூடாக உணரலாம்.

ஆகவே எதிர்காலத்தில் போராடப்போகும் போராளிகள் என்ற அடிப்படையில் நீர் வளத்தை பொறுப்புடன், சிக்கனமாக உபயோகிப்போமாக.

– இது ஒர் டீக்கடை பதிவு –

This Post Has 5 Comments

  1. 88win01

    88win01 is a solid choice for those looking for a reliable online gaming platform. I appreciated the variety of games and the competitive odds. The site’s easy to use and bonuses are pretty generous. Give it a looksee: 88win01

  2. vaobong1gom

    Been using vaobong1gom for a bit now. Good spot for keeping up with the scores and odds. Nothing too fancy, but it gets the job done, you know? Solid choice.

  3. xsktangiang

    Xsktangiang is part of my weekly routine. Pick the numbers, grab some snacks, and hope for the best. Good luck everyone! Visit xsktangiang.

  4. winvn9

    Winvn9? Yeah, I gave it a whirl. The registration was smooth, and I liked their promotions. Could use a bit more polish visually, but the games played fine. Worth a shot, I reckon. You can find them here: winvn9

Leave a Reply