ஊருக்கு சொல்ல

Kerala Serial Poisoning Case – கேரளாவை உலுக்கிய சௌமியா வழக்கு

Kerala serial poisoning case Tamil

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் கேரள மாநிலம் புதுமைகள் நிறைந்த ஓர் இடமாகும். அது நல்ல விதத்திலும் சரி, தீய விதத்திலும் சரி. அப்படி 2018 இல் கேரளாவையே உலுக்கிய Kerala serial poisoning case தான் இது.

Soumya Family Background & First Death

Kerala serial poisoning case – கேரளா கண்னூரை சேர்ந்த 28 வயதான சௌமியா என்ற பெண், கிஷோர் என்பவரை திருமணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த போதும் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிஷோரை விட்டு விலகி தன் இரு குழந்தைகளோடு தன் தாய் கமலா, மற்றும் தந்தை கண்ணனுடன் தனியாக வாழ்த்து வந்தாள்.

கணவனை பிரிந்து வாழ்ந்தாலும் பெற்றோர், பிள்ளைகள் என வாழ்க்கை நிம்மதியாக நகர்ந்து கொண்டிருக்க 2012 செப்டம்பர் மாதம் சௌமியாவின் இரண்டாவது மகள் கீர்த்தனாவிற்கு ஒன்றரை வயதிருக்கும்போது திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு, அதீத வியர்வை மற்றும் உமிழ்நீர் வெளியேற்றம் போன்ற உடல் உபாதைகள் காரணமாக, குடும்பத்தினரால் தலைசேரி எனும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாள்.

அங்குள்ள வைத்தியர்கள் பல்வேறுபட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மங்கலூர் எனும் ஓர் இடத்தில் இருக்கும் ஓர் வைத்தியசாலைக்கு மாற்றிய போதும் அங்கு சிகிச்சை பலனின்றி அக்குழந்தை பரிதாபமாக உயிரிழக்கிறது.

Second Child Death & Repeating Pattern

இது சௌமியாவின் வாழ்வின் இன்னுமோர் இடியாய் விழுந்தாலும் வாழ்க்கை நகர்ந்தது, அப்படியே சில வருடங்கள் உருண்டோட 2018 ஜனவரி மாதம் 31ஆம் திகதி சௌமியாவின் முதல் குழந்தை ஐஸ்வர்யாவிற்கு, இறந்த கீர்த்தனாவிற்கு எற்பட்டத்தை ஒத்த உடல் உபாதைகள் ஏற்பட உடனடியாக அவளை அதே தலைசேரி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கின்றனர், என்ன முயற்சி செய்தும் இக்குழந்தையையும் வைத்தியர்களால் காப்பாற்ற முடியாமல் போகின்றது.

Mother Kamala’s Death & Growing Suspicion

அப்படி ஐஸ்வர்யா இறந்து 43 நாட்கள் கழித்து மார்ச் மாதம் 68 வயதான சௌமியாவின் தாயிற்கும் வாந்தி, பேதி, அதீத வியர்வை, உமிழ்நீர் என அதே மரண அறிகுறிகள் தென்பட பதறிப்போன சௌமியா மற்றும் கண்ணன் கமலாவையும் அதே தலைசேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் ஆனால் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் போல் ஒரே விடயம் நடக்கிறது, வைத்தியர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி கமலாவும் இறந்து போகிறார்.

இத்தனைக்கும் இம் மூன்று மரணத்திற்கான காரணத்தை கூட வைத்தியர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை!

Crime Branch Investigation Begins

ஆனால் இம்முறை அக்கம்பக்கத்தினர், அக்குறிப்பிட்ட வைத்தியசாலை நிர்வாகம் என அனைவருக்கும் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக இச்சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் சுகாதார சேவைகள் அதிகாரிகளுடன் இணைந்து விசாரனையை ஆரம்பித்தனர்.

முதலில் இவர்கள் வாழும் பகுதியில் காற்றின் தன்மையை பரிசோதிக்க முற்பட்ட போதும் அப்பகுதியில் வேறு யாருக்கும் இவ்வாறானதொரு அறிகுறிகள் இல்லை.

ஆகவே செளமியா குடும்பத்தினரின் உணவு பழக்கவழக்கங்கள், குடிநீரின் தன்மை ஆகியவற்றை பரிசோதிக்க ஆரம்பித்ததுடன், செளமியாவிடம் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருக்கிறதா என விசாரிக்கையில் ஐஸ்வரியாவின் மரணத்தை தொடர்ந்து அவர்களின் குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் ரிப்போட்டில் அவர்களது குழாய் கிணற்று நீரில் அமோனியாவின் அளவு அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டதை தெரிவிக்க அது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை விதைக்க சுகாதார சேவை அதிகாரிகள் அப்பகுதியின் நிலத்தடி நீர் மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர்.

அத்தோடு இறந்த இரு குழந்தைகளுக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கவில்லை ஆனால் தற்போது கமலாவின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட, ரிப்போர்டில் கமலாவின் உடலில் ஒரு நஞ்சு கலந்திருந்தது தெரியவந்தாலும் அந்நஞ்சின் அளவு மிக குறைவாக இருந்தமையால் அது என்ன வேதிப்பொருள் என்பதை உடல்கூராய்வு நிபுணரால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. ஆகவே மேலதிக Toxicology test(நஞ்சுகள் பற்றிய ஆராய்ச்சி) ஆரம்பிக்கப்பட்டதோடு கமலாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

அதற்கிடையே அவர்களது நிலத்தடிநீரின் பரிசோதனை ரிப்போர்ட் வந்தது, அதில் எந்த நச்சு தன்மையும் இருக்கவில்லை. அது அப்பகுதி மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்தது.

Toxicology Tests & Father’s Death

போலீஸாரும் கமலாவின் டோக்ஸிகாலஜி டெஸ்ட் ரிசல்டுக்காக காத்திருந்த நேரத்தில் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அதாவது கமலா இறந்து ஒரு மாதத்தில் சௌமியாவின் அப்பா கண்ணனுக்கும் அதே மரண அறிகுறிகள் தென்பட அவரும் தலைச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்! அதே வேளை இவ்வழக்கு கேரளா போலீசிடம் இருந்து கீரைம் பிராஞ்சுக்கு மற்றப்படுகிறது.

76 வயதான கண்ணனின் உடலிலும் ஒரு நச்சுத்தன்மை கலந்துருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது ஆனால் அது என்ன விஷம் என்பது புதிராகவே நீடிக்க, அவர் தலை எழுத்திலும் எந்த மாற்றமும் இல்லை, அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களில் உயிர் துறக்கிறார். அவரின் உடலிலும் சாம்பிள்கள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்படுகிறது. 

Kerala serial poisoning case மேலதிக விசாரணைகள் 

இப்போது கீரைம் பிராஞ்ச் அதிகாரிகள் விசாரணையை பல கோணங்களில் முன்னெடுக்கின்றனர், சௌமியாவின் முன்னால் கணவர் கிஷோர் மீதும் ஒரு சந்தேகம் எழுகிறது காரணம் அவர் தன் முன்னால் மாமியார், மாமனாரின் இறுதி சடங்கில் கூட பங்கேற்கவில்லை!

ஆனாலும் அவர் இதை செய்திருப்பதற்கான ஆதரங்களோ, மோடிவ்வோ இல்லை. பின் அக்குடும்பத்தில் சௌமியா மட்டுமே எஞ்சி இருப்பதால் சௌமியா அதிகாரிகளின் சந்தேக வட்டத்துக்குள் வந்து விசாரிக்கப்பட்டாள், 

Aluminium Phosphide – The Hidden Poison

தீடீரென சௌமியாவிற்கும் அதே உடல் உபாதைகள் தென்படுகிறது. அவளும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாள், வைத்தியர்களின் நீண்ட போராட்டம் இம்முறை பலன் தந்தது அவளின் உடலில் கலந்திருந்த நஞ்சு அலுமினியம் போஸ்பேட் என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சைகளை வழங்கி அவள் உயிரை காப்பாற்ற வைத்தியர்களால் முடிந்தது.

அவ்வாறு உடல்நிலை தேறும்வரை வைத்தியசாலையில் இருக்கும் வேளை கமலா மற்றும் கண்ணனின் டோக்ஸிகாலஜி ரிப்போர்ட் வர அவர்களின் மரணத்திற்கும் காரணம் இதே அலுமினியம் போஸ்பேட் தான் என தெரிய வந்தது.

அதை தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் நான்கு மாத்தங்களுக்கு முன் இறந்த ஐஸ்வர்யாவின் உடலையும் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய ஒன்பது வயதான அக்குழந்தையும் இதே அலுமினியம் போஸ்பேட் நஞ்சால் தான் இறந்திருப்பது தெரிய வருகிறது. 

Police Suspicion on Soumya

குடும்பத்தையே அழிக்க நினைத்தது யாரென்று அதிகாரிகள் தலை சுற்றி நிற்க அதிகாரிகளுக்கு சௌமியாவின் நடவடிக்கைகளில் சிறு சந்தேகம் எழுகிறது அதற்கான காரணம் அவள் அங்குள்ள டாக்டர்கள், தாதிகள் மற்றும் வந்து போகும் போலீஸ் அதிகாரிகளிடம் “தன் அப்பா, அம்மா, குழந்தைகளின் ரிப்போர்ட் வந்து விட்டதா! ஏதும் நஞ்சு கலந்திருந்ததா?” என கேட்டுக்கொண்டே இருக்க அது, அவள் அறிந்த ஒன்றை வேறு யாரும் அறிந்து விடுவார்களோ என்ற தொனியின் இருந்தது.

ஆகவே போலீஸார் வைத்தியசாலையில் உள்ளவர்களிடம் சௌமியாவிற்கு விசாரணை தொடர்ப்பான எந்த தகவலையும் வழங்கவோ அவள் மீது சந்தேகம் இருப்பதை காட்டிக்கொள்ளவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டு சௌமியாவை பற்றி விசாரணையை ஆரம்பித்தனர்.

அதன் அடிப்படையில் சௌமியாவின் மூத்த சகோதரி அதிகாரிகளிடம் சொன்ன ஒரு தகவல் இவ்விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. கண்ணன் இறப்பதற்கு ஒரு மாதத்திதற்கு முன்னரும் ஒருதடவை அவருக்கு வாந்தி, அதிக வியர்வை, அதிக உமிழ்நீர் வெளியேற்றம் ஆகிய உபாதைகள் ஏற்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது சௌமியாவின் மூத்த சகோதரியை சந்தித்து பின்வருமாறு கூறியுள்ளார் ஒருநாள் சௌமியாவின் மூத்த மகள் ஐஸ்வர்யா கமலாவிடம் “நேற்று இரவு அம்மாவின் பக்கத்தில் இரண்டு ஆண் நபர்கள் தூங்கி கொண்டிருந்தார்கள்” என்றிருக்கிறாள்.

அதை கண்ணனிடம் கமலா தெரிவித்ததுடன் சௌமியாவிடமே இது தொடர்பாக கேட்டிருக்கிறார், அதற்கு சௌமியா “அவள் நேற்றிரவு தீடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து பயத்தில் அழுதாள். ஏதும் கனவு கண்டு உளறுகிறாள்” என்று கேசுவலாக மறுத்திருக்கிறாள்.

ஒருவேளை ஐஸ்வர்யா சொன்னதைப்போல் சௌமியா ஏதும் தப்பான வழியில் செல்கிறாளோ என்று கண்ணன் கவலை பட்டதாக சௌமியாவின் அக்கா அதிகாரிகளிடம் சொல்ல அதன் அடிப்படையின் போலீஸார் விசாரணை செய்தனர்.

Dark Double Life Revealed

சௌமியா ஒரு தொழிற்சலையில் வேலை செய்யும்போது தான் கிஷோரை சந்தித்து திருமணம் செய்திருக்கிறாள். பின்பு கிஷோரை பிரிந்து தன் பெற்றோரிடம் தஞ்சம் புகுந்ததன் பின் எந்த வேலைக்கும் போகவில்லை. ஆனால் சௌமியாவின் வங்கி கணக்கை பரிசோதனை செய்த போது வேறுப்பட்ட பல வங்கி கணக்குகளில் இருந்து அடிக்கடி நிறைய பணம் வந்துள்ளதை போலீஸார் கவனித்தனர்.

அதை தொடர்ந்து அவளின் தொலைபேசி இலக்கத்துக்கான ஆறு மாத கால் ரெகார்டை (Call Record) பரிசோதித்த அதிகாரிகள் அதில் ஒரு வித்தியாசமான விஷயத்தை கண்டுபிடிக்கின்றனர். பகல் வேளைகளில் சௌமியாவிற்கு வேறுட்ட இலக்கங்களில் இருந்து நிறைய அழைப்புகள் வருவதும் அதில் பல இலக்கங்களின் லொகேஷன் (Location) இரவு நேரங்களில் சௌமியாவின் வீட்டை சுற்றி இருப்பதும் ஆகும்.

இப்படி பணம் அனுப்பியது, தொலைபேசியில் தொடர்பில் இருந்தது, இரவில் சௌமியா வீட்டுருகில் இருந்தது என்று அத்தனை நபர்களும் 18 வயது முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் என்பதையும் கண்டுபிடிக்கின்றனர்.

அதில் சம்பந்தப்பட்டவர்களை பிடித்து விசாரிக்கையில் சௌமியா பல ஆண்களோடு உடல் ரீதியான தொடர்பில் இருந்ததும், அதற்காக பணம் பெற்றதும் தெரிய வந்தது.

இந்த நிகழ்வுகளுக்கும், நடந்த நான்கு மரணங்களுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தின் பேரில் சௌமியா டிஸ்சார்ஜ் ஆனதோடு அவளை போலீஸ் கஸ்டடிக்கு எடுத்து விசாரணையை ஆரம்பித்தனர்.

முதலில் போலீசுக்கு எதுவுமே தெரியாது தன்னை ஜஸ்ட் ஒரு விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர் என்று நடித்து பார்த்த சௌமியாவுக்கு போலீஸாருக்கு தன் இருண்ட பக்கம் அம்பலமாகிவிட்டது என தெரிந்தது மட்டும் அல்லாது அவளுடன் தொடர்பில் இருந்தவர்களும் சிக்கி உள்ளனர் என்று தெரிந்ததும் வேறு வழியின்றி நடந்ததை ஒப்பிக்க ஆரம்பித்தாள்.

இவ்விசாரணை கிட்டத்தட்ட 13 மணித்தியாலங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. அதன் படி அவளின் ஒப்புதல் வாக்குமூலம் பின்வருமாறு.

Kerala serial poisoning case Tamil

Soumya’s Confession

தன் குடும்பத்தின் கடைசி மூன்று மரணங்களுக்கும் அவள் தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டாள்! அவள் தன் கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் வந்து பெற்றோருடன் வாழ தொடங்கியதும் பெரும் பணக்கஷ்டத்துக்கு தள்ளப்பட்டதாகவும் தன் தேவை, தன் குழந்தைகளின் தேவை அத்தனைக்கும் தன் பெற்றோரை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் கூறினாள்.

அதன் காரணமாக சில ஆண்களுடன் உடல் ரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அதில் பணம் பார்க்க ஆரம்பித்ததாகவும் கூறிய சௌமியா, அது தன் உடல் தேவை மற்றும் பணத்தேவை இரண்டையும் பூர்த்தி செய்ததால் தனக்கு அது பிழையாய் தோன்றவில்லை என்றும் கூறினாள்.

பகலில் அவ் ஆண்களோடு தொலைபேசியில் தொடர்பில் இருந்தவள் இரவில் அவள் வீட்டுக்கே வரவழைத்து உள்ளாசமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறாள். மேலும் தன் இரண்டாவது குழந்தை கீர்த்தனா இயற்கையாகத்தான் இறந்ததாக கூறினாள்.

Keerthana’s Murder

அதன்பின் ஒருநாள் இரவு அவள் இரு ஆண்களுடன் ஒன்றாக கட்டிலில் இருக்கும் வேளை தூங்கிக்கொண்டிருந்த தன் முதல் மகள் ஐஸ்வர்யா திடீரென எழுந்ததாகவும் சௌமியா இரு ஆண்களுடன் இருப்பதை அவள் கண்டதையடுத்து, அக்குழந்தையின் கன்னத்தில் அடித்து அழவைத்து தூங்க வைத்ததாகவும் அதை கண்டு அவ் இரு ஆண்களும் ஓடி விட்டதாகவும் தெரிவித்தாள்.

அதைத்தான் அக் குழந்தை தன் பாட்டி கமலாவிடம் கூறியதாகவும் அவள் அதை கனவு என்று சமாளித்தாலும் கமலா சௌமியா மேல் சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார் எனவும் அத்தோடு ஐஸ்வர்யாவிற்கு விவரம் தெரியும் வயது அதனால் இனிமேலும் தன்னால் அப்படி ஒரு உள்ளாசமான வாழ்கையை வாழ அவள் தடையாய் இருப்பாள் என்று அவள் உணவில் சிறிது சிறிதாக எலி மருந்தை கலந்து கொடுத்து கொலை செய்ததையும் கூறியவள்.

Kamala’s Murder

அம்மரணத்திற்கும் இறுதி சடங்குகளுக்கும், அதன் பின் நலம் விசாரிக்கவும் பல ஆண்கள் வீட்டுக்கு வந்தது கமலாவின் சந்தேகத்தை அதிகரித்தது மட்டும் அல்லாமல் வருவோரிடம் “நீ யார்? எப்படி சௌமியாவை பழக்கம்?” என்று கேள்விகள் கேட்டு பிரச்சனை படவும் ஆரம்பிக்க ஐஸ்வர்யாவை கொலை செய்தது நான்தான் என்பதை கண்டு பிடித்து விடுவோரோ என்ற பயத்தில் கமலாவின் உணவிலும் சிறிது சிறிதாக எலி மருந்தை கலந்து கொலை செய்ததாகவும் கூறினாள்.

Kannan’s Murder

கமலாவின் மரணம் கண்ணனுக்குள் சந்தேகத்தை அதிகரிக்க இரவிலும் அவர் சௌமியாவை கண்காணிக்க ஆரம்பித்ததாவும் கூறிய சௌமியா அதன் காரணமாக அவருக்கும் உணவில் விஷம் வைத்து கொலை செய்ததையும் ஒப்புக்கொள்கிறாள், அதில் ஒருமுறை கண்ணன் தப்பியதாகவும் இரண்டாவது முறை கொல்லப்பட்டதையும் தெரிவித்ததுடன், அவள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால் அவளும் அவ் விஷத்தில் சிறுஅளவு எடுத்து கொண்டதையும் அதனால் அவள் மரணிக்க மாட்டாள் என்பதும் அவளுக்கு தெரிந்திருந்தாகவும் தெரிவித்தாள். 

“Kerala serial poisoning case” Jail Death & The Mystery of  “அவன்”

சௌமியாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போலீஸார், சௌமியாவை கண்னூர் மகளீர் சிறைசாலையில் அடைத்து அக் குற்றத்திற்கான ஆதாரங்களை சேகரித்துகொண்டிருந்த வேளையில் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி 2018 அன்று சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை சௌமியா சிறைசாலைக்குள் இருந்த ஒரு மரத்தில் சக கைதி ஒருவரின் சேலையை உபயோகித்து தூக்கிட்டு இறந்து போகிறாள்.

இறப்புக்கு முன் அவள் எழுதி வைத்த கடிதத்தில், அவள்:

“என் மரணத்திற்கு சிறைச்சாலையில் எவரும் காரணம் இல்லை, அதிகாரிகள் யாரும் துன்புறுத்தவும் இல்லை அத்தோடு அவள் போலீஸாரிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் பொய் எனவும் அவளுக்கும் அக்கொலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இத்தனைக்கும் காரணம் “அவன்” (He) என்று எழுதி இருந்ததுடன்

“அவன் என் குடும்பத்தையே நாசமாக்கி விட்டான், ஜெயிலில் இருந்து தப்பிக்க எனக்கோர் சந்தர்ப்பம் கிடைத்தால் அவனை கொன்று விட்டு மீண்டும் சிறைக்கு வருவேன்” என்றும் எழுதி இருந்தாள். ஆனால் அந்த “அவன்” யாரென்பதை எங்குமே குறிப்பிடப்படவில்லை. 

Conclusion – Unanswered Questions

அக்கொலைகளை அவள் தனியாக செய்திருக்க முடியாது அவளுடன் பழகி ஆண்களில் யாரேனும் உதவி செய்திருக்கலாம் அல்லது அவனின் தூண்டலின் பேரில் இவள் செய்திருக்கலாம் அந்த நபரை தான் “அவன்” என்று எழுதினாள். அல்லது தன் முன்னால் கணவர் இவளை கைவிட்டதால் தான் அவளின் வாழ்க்கை இப்படி மாறியது ஆகவே கிஷோரை தான் “அவன்” என்று குறிப்பிட்டு இருக்கிறாள் என்றும் பல கருத்துக்கள் உண்டு ஆனால் அவள் “அவன்” என்று குறிப்பிட்டது அவள் கரெக்டரை சுத்தப்படுத்திக்கொள்ளத்தான் என்பதே Teakade எங்களின் கருத்து. 

This Post Has One Comment

  1. 881bet

    Yo, 881bet, huh? Felt pretty standard to me. Nothing crazy impressive, but nothing that will blow up in your face either if you know what I mean? 881bet

Leave a Reply